வடக்கு மாகாணத்தில் பூகோள நலன் சார்பு இடங்களை குறிவைக்கிறது சீனா - சபா.குகதாஸ்



யாழ் லக்சன்-
து தொடர்பில் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

இலங்கைத்தீவில் தென்னிலங்கையில் பூகோள நலன் சார்பு இடங்களை குறிவைத்த சீனா தற்போது வடக்கு நோக்கி தன்னுடைய பார்வையை திருப்பியுள்ளது.

தென்னிலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு போர்ட் சிற்றி ,கொழும்பு தாமரைக் கோபுரம்,அம்பாந்தோட்டை விமானத்தளம்,காலி முகத்திடல் ஏழு நட்சத்திர ஹோட்டல்,என அமைக்கப்பட்ட அத்தனை திட்டங்களுக்கு பின்னால் வர்த்தம் என்ற போர்வைக்குள் சீனாவின் பூகோள நலன்கள் எதிர்கால கனவுகள் நிறைந்துள்ளன.

வடக்கு மாகாணத்திலும் பூகோள நலன் சார்ந்த இடங்களை வர்த்தக மற்றும் அபிவிருத்தி என்ற போர்வையில் குறிவைத்துள்ளது அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் முதன்மையான மூன்று தீவுகள் (நயினாதீவு,அனலைதீவு,நெடுந்தீவு) காங்கேசன்துறை மாளிகை, பூநகரி கௌதாரிமுனை கடற்பகுதி, எதிர்காலத்தில் வெளிவரத் தயாராக இன்னும் பல முக்கியமான இடங்கள் சீனா வசம் கைமாறப் படவுள்ளன.

வர்த்தகம் , அபிவிருத்தி நோக்கில் குறி வைக்கப்படும் இடங்கள் இராணுவ ரீதியான நடவடிக்கைகளுக்கு மிக முதன்மையான இடங்கள். குறிப்பாக இராணுவ தளங்கள், ராடர் நிலையங்கள் ,அமைப்பதற்கு புவிசார் அமைவை கொண்டுள்ளன. கௌதாரிமுனை இதற்கு மேலதிகமாக மிகப் பெறுமதியான பெருமளவு மணல் வளத்தை கொண்டுள்ளதாகவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :