கடந்த ஒன்றறை மாதங்களாக நாடு பூராகவும் பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் இருந்த நிலையில் நாளைய தினம்(21) பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுவதை அடுத்து கல்முனை பொதுச் சந்தையினை மீள திறப்பது சம்மந்தமான உயர் மட்ட கள விஜயம் இன்று(19) கல்முனை மாநகர முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் கல்முனை சந்தையில் இடம்பெற்றது.
நாளைய தினம் உரிய சுகாதார வழிமுறைகளோடு சந்தையை மக்கள் பாவனைக்காக திறப்பது சம்மந்தமாகவும், குறித்த ஒரு வழியினால் சந்தையில் உள் நுழைவது பற்றியும் வெளியேறுவது பற்றியும் விரிவாக ஆராயப்பட்டதுடன் சந்தைக்கு வரும் பொது மக்கள் சமூக இடைவெளிகளை பேணி பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதுடன்,சந்தைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் உவெஸ்லி பாடசாலை பக்கமாக நிறுத்தி வைத்துவிட்டு சந்தைக்கு உள்வர வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதே வேளை அனைத்துவிதமான மொத்த வியாபாரிகளும் தங்களது மொத்த வியாபாரங்களை காலை 8 மணிக்கு முன்னர் நிறைவு செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த உயர் மட்ட கள விஜயத்தின் போது கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி,கல்முனை மாநகர சபை ஆணையாளர் எம்.சி அன்சார்,கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம் அஸ்மி,கல்முனை மாநகர சபை பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் அர்சாத் காரியப்பர்,கல்முனை பொலிஸ் நிலைய பதில் தலைமை பொலிஸ் அதிகாரி எம்.உதயான்கே,கல்முனை பொது சந்தை வர்த்தக சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment