தேசியப் பட்டியல் ஆசனத்தை தனக்குத் தருவதாகத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க தன்னை ஏமாற்றிவிட்டதாக அந்தக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான ஜோன் அமரதுங்க கவலை வெளியிட்டுள்ளார்.
ஊடகமொன்றுக்கு இன்று வியாழக்கிழமை வழங்கிய தொலைபேசி ஊடான நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் தாம் போட்டியிட இருந்த நிலையில்தான் தேசியப்பட்டியல் உறுப்பினர் ஆசனத்தை தனக்கு வழங்குவதாக தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொள்ளும்படி கோரியதாகவும், அதற்கமையவே தாம் போட்டியிடவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
அதுமாத்திரமன்றி தேர்தலில் தோல்வியடையும் உறுப்பினர்களுக்கு தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்கப்போவதில்லை என்ற முடிவினை ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு எடுத்திருந்தது. ஆனால் இன்று அந்த தீர்மானத்தை கட்சியின் தலைவரே மீறியிருப்பதாக ஜோன் அமரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment