திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு தேவையான கருவிகளை உடனடியாக வழங்கவும் -சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை



அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அதிகளவிலான கருவிகள் இல்லாமையினால் நோயாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், நோயாளர்களின் நலன் கருதி அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு தேவையான கருவிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கை கடிதத்தினை சுகாதார அமைச்சருக்கு சமூக அபிவிருத்தி கட்சி அனுப்பி வைத்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை பொது வைத்தியசாலை மிக முக்கியமான வைத்தியசாலையாகும்.
இவ் வைத்தியசாலையில் பல பற்றாக்குறைகள் இருக்கின்ற போதிலும் தற்போதைய சூழ்நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு அவசரமாக 22 விதமான கருவிகள் தேவைப்படுவதாக
சமூக அபிவிருத்தி கட்சியின் பொதுச்செயலாளர் குகதாஸ் பிரகாஷ்  (31) மத்திய சுகாதார அமைச்சருக்கு அவசர கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
இதனடிப்படையில் மாவட்டத்தில் கந்தளாய் வைத்தியசாலை கொரோனா வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளதால் அனைத்து நோயாளர்களும் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வருகை தருகின்றனர்.

இருந்தபோதிலும் வைத்தியசாலைக்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்த போது அதிதீவிர சிகிச்சைப் பரிவில் பாரிய பற்றாக்குறைகள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடிதத்தில் குறிப்பிடப்படுகின்ற 22 கருவிகளையும் உடனடியாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :