கொரோனாவால் உயிரிழந்த ஊழியர்க்கு சபையில் அஞ்சலி! சுகாதாரவைத்தியஅதிகாரியின் சேவைக்கு சபையில் புகழாரம்.



வி.ரி.சகாதேவராஜா-
கொரோனா தாக்கத்துக்குட்பட்டு அண்மையில் முதலாவதாக உயிரிழந்த காரைதீவு பிரதேசசபை ஊழியர் வினாயகமூர்த்தி சுரேந்திரனுக்கு நேற்று இடம்பெற்ற சபை அமர்வின்போது 3நிமிட நேரம் மௌனாஞ்சலி செலுத்தப்பட்டது.

காரைதீவு பிரதேசசபையின் 40வது மாதாந்த சபை அமர்வு சுகாதார முறைப்படி நேற்று தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் சுமார் ஒருமணிநேரம் நடைபெற்றது.
சபைஅமர்வில் முதல் நிகழ்வாக அனைவரும் எழுந்துநின்று மௌனாஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் அமைய ஊழியர் வினாயகமூர்த்தி சுரேந்திரனை இழந்து பரிதவிக்கும் அவரது குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க தவிசாளர் சில உறுப்பினர்கள் மற்றும் சபை ஊழியர்களும் முன்வந்தனர்.

இதேவேளை காரைதீவுப்பிரதேசம் கொரோனா தடுப்புமுறைகளில் சிறந்துவிளங்குவதற்கு இரவுபகலாக உழைத்து தம்மை அர்ப்பணித்துவரும் சுகாதாரவைத்திய அதிகாரி திருமதி தஸ்லிமா பசீர் மற்றும் பொதுச்சுகாதாரப்பரிசோதகர்கள் உள்ளிட்ட குழாத்தினருக்கு சபையில் பாராட்டும் புகழாரமும் செலுத்தப்பட்டது.

தவிசாளர் வைத்தியஅதிகாரி தஸ்லிமாவின் சேவையை பாராட்டிப்பேசுகையில் இன்றைய இந்த இக்கட்டான காலகட்டத்தில் உயிரை துச்சமென மதித்து மக்களுக்காக சேவைசெய்யும் சுகாதாரஅதிகாரி மற்றும் குழாத்தினருக்கு இந்தமண் சார்பாக நன்றிகூறுவதோடு நாம் சபைஉறுப்பினர்கள் அனைவரும் சுகாதாரதுறைக்கு ஒத்துழைக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
இன்றையஇக்கட்டான காலத்தில் அதிகாரப்போட்டி தலைமைத்துவப்போட்டி என்பவற்றை கைவிட்டு அதிகாரிகளும்சரி பொதுமக்களும் சரி முதன்மையான சுகாதாரத்துறையினருக்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும். என்றார்.

உறுப்பினர் த.மோகனதாஸ் சுகாதாரவைத்தியஅதிகாரி தஸ்லிமாவின் தன்னலமற்ற இனமதபேதம் பாராத அர்ப்பணிப்பான சேவைக்கு நாம் தலைவணங்கவேண்டும் .எவ்விதமான பகட்டையோ விளம்பரத்தையோ விரும்பாமல் சேவையாற்றும் அக்குழுவினருக்கு நன்றிகூறுகிறேன் என்றார்.

சமகால கொரோனாத் தாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தையிழந்த அமைய சுகாதார ஊழியர்கள் 23பேருக்கும் உலருணவு வழங்க தவிசாளர் கி.ஜெயசிறில் தாமாக முன்வந்து தனது இருமாத கொடுப்பனவான 50ஆயிரம் ருபாவை வழங்குவதாகத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :