நாட்டில் கொரோனா மூன்றாம் அலை தீவிரமடைந்துள்ள இந்நிலையில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் முன்னைய பரவல் எண்ணிக்கையை விட தற்போதைய பரவல் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதை சுட்டிக்காட்டி சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கு பொதுஜன பெரமுன ஏறாவூர் செயற்பாட்டாளரும் நாம் இலங்கையர்கள் அமைப்பின் தலைவருமான இஸ்ஸதீன் மேற்படி வேண்டுகோளை முன் வைத்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி அதிகமான நாடுகள் பாதிப்படைந்து லட்சக்கணக்கான மக்கள் இறந்ததுடன் உலகமே ஒரு தளம்பல் நிலையில் இருந்து கொண்டிருக்கின்ற சூழநிலையில் . பல நாடுகள் இன்னும் கொரோனா தொற்றில் இருந்து விடுபாடாத துர்ப்பாக்கிய நிலமையே உள்ளது. விரைவில் முழு உலகும் இப்பிரச்சினையில் இருந்து விடுபட வேண்டும்.
உலகையே ஆட்டிப்படைத்த கோரோனா எமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை. இவ்வாறான இக்கட்டான காலகட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக கிடைத்தது நாட்டுக்கு கிடைத்த அதிஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.
கொரோனா தாக்கத்தின் மத்தியிலும் நாட்டு மக்களை பாதுகாக்க செயற்படுவதுடன் அபிவிருத்தியிலும் நாட்டை முன்னேற்றும் ஏனைய செயற்பாடுகளிலும் தடைகள் ஏற்படாமல் முன்னோக்கி செல்வது உண்மையான நாட்டு தலைவருக்குறிய அடையாளமாகும். என்று தனது கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டதுடன்,
பயணத்தடை விதிக்கப்பட்டு மக்கள் வீடுகளில் இருக்கும் படி வேண்டிக் கொள்ளப்பட்டதுடன் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு நிவாரண கொடுப்பனவுகள் வழங்கப்படுவதோடு பல்வேறு தரப்பினருக்கும் சலுகை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தமைக்கு ஜனாதிபதி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரிக்கு பிரதி இடப்பட்ட மேற்படி கடிதத்தில் சுகாதார அமைச்சரின் அர்ப்பணிப்பையும் வழிகாட்டுதலையும் பாராட்டியதோடு, கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சகல தரப்பினருக்கும் நன்றியினையும் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் சுகாதார அமைச்சின் மூலம் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதற்கு
வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன் அந்த வகையில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து காணப்படும் கொரோனா தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு மாவட்ட மக்களுக்கும் விரைவாக தடுப்பூசி வழங்குமாறு கௌரவ அமைச்சர் அவர்களிடம் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
0 comments :
Post a Comment