விவசாயிகளை விவசாயத்தில் நட்டமடையச் செய்யும் என்பதால் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என மூதூர் பிரதேசசபை உப தவிசாளர் சி.துரைநாயகம் தெரிவிப்பு.



எப்.முபாரக்-
சேதன பசளையின் பாவனையையே விவசாயிகளும் விரும்புகின்றார்கள். ஆனால் விவசாய நிலங்களும், பயிர்களும் அதற்கு தயாராக இல்லாத நிலையில் அரசாங்கம் வழங்கிவந்த பசளையை திடீரென நிறுத்தியுள்ளமையானது விவசாயிகளை விவசாயத்தில் நட்டமடையச் செய்யும் என்பதால் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என மூதூர் பிரதேசசபை உப தவிசாளர் சி.துரைநாயகம் இன்று(1) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்: சேதனப்பசளையின் மூலம் நஞ்சற்ற உற்பத்திகளை மேற்கொள்ளவே விவசாயிகளும் விரும்புகின்றார்கள் ஆனால் காலங்காலமாக அசேதன பசளையே அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்துள்ளது இதனால் விவசாயிகளும், விவசாய நிலங்களும் அசேதன பசளைக்கு அடிமையாகியுள்ளன. இந்நிலையில் கட்டம் கட்டமாகவே விவசாயிகள் அசேதன பசளையின் பாவனையில் இருந்து விடுபட்டு சேதனப் பசளையின் பாவனைக்கு மாற முடியும் திடீரென மாற முயற்சிக்கும்போது உற்பத்திகள் பாதிப்படைவதோடு விவசாயிகளும் உற்பத்தியில் நட்டத்தினை எதிர்நோக்க வேண்டிவரும். குறிப்பிட்ட காலத்தில் விசிற வேண்டிய பசளையும், பூச்சி மருந்தும் இல்லாமையினால் விவசாய உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளன. மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்த கதையாக கொரோனாவின் காரணமாக உற்பத்தி செய்யப்பட்ட விவசாய பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் நட்டமடைந்திருக்கும் விவசாயிகளை தொடர்ந்தும் அரசாங்கம் பாதிப்புக்குள் தள்ளக்கூடாது.

அசேதனப் பசளையின் பாவனை காரணமாக நாம் பல்வேறு நோய்களுக்கு இலக்காகி வருவதோடு நீரினதும், நிலத்தினதும் மாசுக்கு வித்திட்டு வருகின்றோம் என்பதையும் மறுக்க முடியாது. இருந்தாலும் விவசாயிகளால் திடீரென சேதனப் பசளைக்கு மாறிவிட முடியாது. இதற்கு சற்று காலம் தேவைப்படும் இந்த கால அவகாசத்தை அரசாங்கம் விவசாயிகளுக்கு வழங்கி தனது நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்து மேற்கொள்ளப்பட்டிருக்கும் பயிர்களுக்கான பசளையை வழங்க வேண்டும்;. அத்துடன் சேதனப் பசளையை உற்பத்தி செய்யக்கூடிய வளங்கள் எமது நாட்டில் காணப்படுகின்றமையால் சேதன பசளையை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :