இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,
கல்முனை வடக்கு பிரதேச செயல்கம் என்ற ஒன்று இது வரை உருவாக்கப்படவில்லை. இப்போது இருப்பது கல்முனை செயலகத்தின் கீழ் இயங்கும் உப செயலகமாகும். இதனை தமிழ் செயலகம் என கூறுவது நாட்டின் சட்டங்களுக்கு முரண்பட்டதாகும்.
30 வீதம் தமிழ் மக்கள் வாழும் கல்முனையில் தமிழர்களுக்கென உப பிரதேச செயலகம் இருப்பது நியாயம் என்றால் 40 வீதம் முஸ்லிம்கள் வாழும் காரைதீவு பிரதேச செயலகத்தில் முஸ்லிம்களுக்கென உப செயலகம் வழங்கப்பட வேண்டும் என்ற எமது கட்சியின் கோரிக்கையும் நியாயமானதாகும்.
கல்முனை செயலக பிரச்சினையை மஹிந்தவின் காலத்தில்தான் தீர்க்க முடியும் என தொழிற்சங்கவாதி கூறியிருப்பது பாராட்டுக்குரிய விடயமாகும். இதைத்தான் உலமா கட்சி பல காலமாக சொல்கிறது. இந்த உண்மையை முஸ்லிம்களின் ஓட்டுக்களை பெற்று சுகம் அனுபவிக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கு புரியவில்லை.
மஹிந்த ராஜபக்ஷ ஏனைய அரசியல்வாதிகள் போன்று பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டுபவர் அல்ல. முடியுமானதை முடியும் என சொல்லும் அரசியல்வாதி. கல்முனை முஸ்லிம்கள் எமது கட்சியை பலப்படுத்தியிருந்தால் எப்போதோ உப செயலகத்தை ரத்து செய்து தமிழ் மக்களுக்கென 1987ம் ஆண்டுக்கு முன்பிருந்த தாளவெட்டுவான் முதல் மருதமுனை வரையான கல்முனை வடக்கு செயலகத்தை பாண்டிருப்பு செயலகம் என்ற பெயரில் வழங்கியிருப்போம்.
ஆகவே கல்முனை செயலகம் பற்றி பேசும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தொழிற்சங்கவாதிகளுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். வாருங்கள். அனைவரும் சேர்ந்து பேசி பிரதமர் மஹிந்தவைக்கண்டு இனம், இடம் என்று இல்லாமல் பிரதேசத்துக்கென இன்னொரு செயலகம் கேட்போம். இப்பிரச்சினையை தீர்ப்போம். இதனை நாம் தீர்க்காவிட்டால் தமிழ் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் வாக்கு சேர்க்கும் பிச்சைக்காரனின் புண்ணாகவே இது இருக்கும்.
0 comments :
Post a Comment