கிராம அலுவலர் வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை



நாடு பூராகவும் உள்ள பிரதேச செயலகங்களில் வெற்றிடமாகக் காணப்படும் கிராம அலுவலர் பிரிவுகளுக்கு கிராம அலுவலர்களை நியமிப்பதற்காக தகுதியுடையவர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் நடாத்தப்படும் எழுத்துப் பரீட்சையில் தோற்றுவதற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகைமையுடைய பெண் / ஆண் ஆகிய இரு பாலாரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது. அத்தோடு அப்பரீட்சை, பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் 2021, செத்தெம்பர் மாதம் நடாத்தப்படும் என்பதையும் இத்தால் அறியப்படுத்தப்படுகின்றது.

கல்வித் தகைமைகள் –
விண்ணப்பதாரிகளுக்கு கீழ்வரும் வகையில் குறிப்பிடப்படடுள்ள கல்வித் தகைமைகள் இருத்தல் வேண்டும்.
(அ) முதன் மொழியாக சிங்களம் அல்லது தமிழ் மொழிகளில் ஏதாவதொரு மொழியிலான பாடம் மற்றும் கணிதம் உள்ளிட்ட குறைந்தபட்சம் நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஆறு (06) பாடங்களில் ஒரே தடவையில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர ( சாதாரண தரம்) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்

(ஆ) கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தரப்) பரீட்சையில் சகல பாடங்களிலும் ( பொது அறிவுப் பரீட்சை மற்றும் பொது ஆங்கிலம் தவிர்ந்த) ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். பழைய பாடத்திட்டத்தின் கீழ் (03) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் போதுமானதாகும்.

சேவை நிபந்தனைகள் :
ஆட்சேர்ப்பு நடைபெறுவது கிராம அலுவலர் சேவையின் தரம் 3 இற்காகும்.
இந்நியமனம் நிரந்தரமானதும் ஓய்வதிய உரித்துடையதுமாகும். உமக்குரித்தான ஓய்வதியத் திட்டமானது அரசாங்கத்தினால் தொடர்ந்தேர்ச்சையாக எடுக்கப்படும் கொள்கைசார் தீர்மானங்களுக்கு உட்பட்டதாகும். விதவைகள் அநாதைகள் / தபுதாரர்கள் அநாதைகள் அலுவல நிதியத்திற்கு பங்களிப்புச் செய்தல் வேண்டும். மூன்று மாத (03) பயிற்சிக் காலம் கிராம உத்தியோகத்தர் சேவைக் காலத்துடன் கணக்கிடப்படுவதில்லை.
முதல் நியமனத் திகதி முதல் மூன்று வருடங்களுக்கு நியமிக்கப்படும் பிரதேச செயலகப் பிரிவினுள் கட்டாயம் சேவையாற்றல் வேண்டும்.

கிழமையில் ஒரு நாள் விடுமுறை தினமாக வழங்கப்படும். அத்தினம் தவிர்ந்த ஏனைய வார நாட்களில் 24 மணித்தியாலங்களும் கடமையாற்றுவதற்கு நியமிக்கப்படும் கிராம அலுவலர் பிரிவினுள் தங்களது கடமையைச் செய்வதற்கு கட்டுப்பட்டுள்ளார்.இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட ஒருவர் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறை, அரச சேவை ஆணைக்குழுவின் ஒழுங்கு விதி, தாபன விதிக்கோவை மற்றும் நிதிப் பிரமாணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கும் நிபந்தனைகளுக்கும் அரசினால் விதிக்கப்பட்டுள்ள மற்றும் எதிர்வரும் காலங்களில் விதிக்கப்படும் நிபந்தனை களுக்கும் ஏற்பாடுகளுக்கும் உட்பட்டவராவார்.

கிராம அலுவலர் வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முறை :
9.1 இவ்வறிவித்தலின் இறுதியில் உள்ள மாதிரிப் படிவத்திற்கமைய தயாரிக்கப்பட்ட விண்ணப்பத்தினை 2021.06.28ஆந் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர் ”பரீட்சை ஆணையாளர் நாயகம், நிறுவன மற்றும் வெளிநாட்டு பரீட்சைக் கிளை, இலங்கை பரீட்சைத் திணைக்களம், தபால் பெட்டி – 1503, கொழும்பு”” என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும்.

விண்ணப்பப்படிவத்தை இட்டு அனுப்பும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் ”கிராம உத்தியோகத்தர் III ஆந் தரத்துக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சை 2020(2021)”” என்று குறிப்பிடுதல் வேண்டும்.
பரீட்சைக் கட்டணமாக 600.00 ரூபாய் அறவிடப்படும்.

விண்ணப்பதாரியின் பெயரில் இப்பரீட்சைக்குரியதாக மாத்திரம் அத்தொகையை ஏதேனுமொரு தபாலகத்தில் / உபதபாலகத்தில், பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் வருமானத் தலைப்பு இலக்கம் 20-03-02-13 இல் வரவு வைத்து கிடைக்கப்பெற்ற பற்றுச்சீட்டை பரீட்சைக்கான விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

(பற்றுச்சீட்டு இலக்கம், திகதி மற்றும் தபாலகம் என்பனவற்றை தெளிவாக குறிப்பிடுதல் வேண்டும்.)
செலுத்தப்பட்ட பரீட்சைக் கட்டணம் எந்தவொரு காரணத்திற்காகவும் மீள வழங்கப்பட மாட்டாது என்பதுடன், இப்பரீட்சைக் கட்டணம் மற்றொரு பரீட்சைக்கு மாற்றவும் இடமளிக்கப்பட மாட்டாது. (அப்பற்றுச்சீட்டின் நிழற்படப் பிரதியை தம் வசம் வைத்துக் கொள்வது பிரயோசனப்படும்.)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :