கடலில் எண்ணெய் கலப்பு;ஏற்றுக்கொண்டது ‘நாரா"



J.f.காமிலா பேகம்-
தீ விபத்துக்குள்ளான கடற்பரப்பை அண்மித்த பகுதியில், மசகு எண்ணெய் நீரில் கலக்கப்படவில்லை என நாரா நிறுவனம் தெரிவிக்கின்றது.

இதன்படி, டீசல் அல்லது மண்ணெண்ய் என்பனவே கலக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த எண்ணெய்ப் படலம் 19 கடல் மைல் வரை பரவியிருந்த போதிலும், அது தற்போது 5 முதல் ஆறு மைல் வரை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நாரா நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, எண்ணெய் பரவுவதை மேலும் கட்டுப்படுத்த BOOM என்ற தொழிநுட்பம் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும், காந்த சக்தியைக் கொண்டு எண்ணெயை அகற்றுவதற்கான சாத்தியப்பாடு இல்லை எனவும் அவ்வாறு மேற்கொள்வதின் ஊடாக கால வீண்விரம் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இதேவேளை, எண்ணெய்ப் படலங்கள் காணப்படுவதின் ஊடாக கடலுக்குள் சூரிய ஒளி பிரவேசிக்காது எனவும், இதனால் கடல் வாழ் உயிரிழனங்கள் இறக்கக் கூடும் எனவும் நாரா நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், எண்ணெய்கள் மணற்பாறைகளில் படியும் பட்சத்தில், குறித்த பாறைகள் வலுவை இழப்பதின் ஊடாக, மண்ணரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும். நாரா நிறுவனத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :