சவூதி அரேபியா, றியாத் நகரிலுள்ள மன்னர் பைஸல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் காத்தான்குடி யைச்சேர்ந்த மாணவி நூறா றமீஸ் வைத்திய துறையில் அதி திறமை சித்தியை (First Class Honours MBBS Degree) பெற்று தனது திறமைகளை வெளிக்காட்டியுள்ளார்
மன்னர் பைஸல் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட MBBS பட்டப்படிப்பை பூர்த்திசெய்து வெளியேறிய மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா அண்மையில் மன்னர் பைஸல் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது. இதில் இலங்கையை சேர்ந்த மூவர் MBBS டாக்டர் பட்டம் பெற்றனர்.
காத்தான்குடியை சேர்ந்த டாக்டர் நூறா றமீஸ் வைத்திய துறையில் அதி திறமை சித்தியை (First Class Honours MBBS Degree) பெற்றதுடன் நான்கு வருடங்கள் தொடர்ச்சியாக Dean's Hounours Award யையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது..
இப்பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்று வெளியேறும் காத்தான்குடியின் முதல் மாணவியாக டாக்டர் நூறா றமீஸ் திகழ்கிறார்.
டாக்டர் நூறா, றியாத் நகரில் வசிக்கும் முஹம்மத் றமீஸ் - மர்ழியா தம்பதிகளின் புதல்வியாவார்.
0 comments :
Post a Comment