எதிர்காலத்தில் மோட்டார் வாகன தண்டப் பணத்தை கடன் அட்டை மூலம் செலுத்தலாம்



திர்காலத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறும் தவறுகளுக்கான தண்ட பணத்தை தம்மிடம் உள்ள கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) மூலம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

சம்பந்தப்பட்ட இடத்தில் கடமையில் இருக்கும் பொலிசாரினால் இந்த தண்டப்பணத்தை கடன் அட்டை மூலம் வசூலிப்பதற்கான தரவை பெற்றுக்கொள்வதற்கான முறை அறிமுகப்படுத்தப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இதுதொடர்பான இணையதள பணக் கொடுக்கல் வாங்கல் முறை உருவாக்கப்பட்டவுள்ளது. வாகனம் சார்ந்த தவறுகளுக்காக சாரதிகளுக்கு புள்ளி வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும். அந்த புள்ளி குறையும் போது சில மாதங்களுக்கு அல்லது பல வருடங்களுக்கு வாகன அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :