யாழ் இந்தியத்துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் ஏழாவது பன்னாட்டு யோகா தின நிகழ்வு



யாழ் லக்சன்-
யாழ் இந்தியத்துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் ஏழாவது பன்னாட்டு யோகா நிகழ்வானது‘யோகாவுடன் இருங்கள் வீட்டில் இருங்கள்' எனும் தொனிப்பொருளில் இன்றைய தினம் நடைபெற்றது.

இந் நிகழ்வானது பன்னாட்டு யோகா நாளின் அதிகாரப்பூர்வ 'யோகாகீதம் இசைத்து நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியத்துணைத் தூதுவர் மாண்புமிகு பாலச்சந்திரனின் தொடக்க உரை இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவர்களது தலைமை விருந்தினர் உரையும், நிகழ்வுக்கான முக்கிய பிரமுகர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் சி.வி.விக்னேஸ்வரன், சி.சிறீதரன், அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ச.சிறீசற்குணராஜா, வடக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சர்கள் திருமதி அனந்தி சசிதரன் மற்றும் முனைவர் க.சர்வேஸ்வரன், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் ஊடக பிரமுகர்கள் திருமதி.உமா சந்திரபிரகாஷ் மற்றும் திரு. பி.எச். அப்துல்ஹமீது அவர்களது காணொளி வாழ்த்து செய்திகளும் இடம்பெற்றன.

தொடர்ந்து தூதரகத்தின் யோகா ஆசிரியர் திரு.சூரியகுமார் தலைமையில் தூதரகத்தின் யோகா வகுப்பு மாணவர்கள் மற்றும் யோகா ஆர்வலர்கள் இணைந்து யோகாசனங்களை நிகழ்த்தினர்.

முன்னதாக கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, யாழ் இந்தியத்துணைத் தூதரகமானது, வடக்கு மாகாணசபையின் கல்வி, கலாச்சார அலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சகத்துடன் இணைந்து வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களின் பாடசாலை மாணவர்களிடையே இணைய வழியில் யோகா வினாடி வினா நிகழ்ச்சியை நடத்தியது. ஐந்து மாவட்டங்களிலிருந்தும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மொத்தம் 2,25,000/-ஐ பரிசுத் தொகையாக, அதாவது, தலா ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதல் பரிசாக ரூபா. 20,000/-ம், இரண்டாவது பரிசாக ரூபா. 15,000/-ம், மூன்றாவது பரிசாக ரூபா.10,000/-ம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் மூலம் மாவட்ட ரீதியில் முதல் மூன்று இடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டவர்கள் விபரம்

யாழ்ப்பாணம் மாவட்டம்

முதலாம் பரிசு-செல்வி.கஜோரிகா குமரன், தரம்-6, யா/சுண்டிக்குளி பெண்கள் உயர்தரப் பாடசாலை.

இரண்டாம் பரிசு-செல்வி.மயூரி தவநேசன்,தரம்-10 யா/வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை.

மூன்றாம் பரிசு-செல்வி. P.மதுசஜி, தரம் 11,யா/வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை

வவுனியா மாவட்டம்

முதலாம் பரிசு-செல்வி.சோபனா டட்ளி, தரம்-9, வவு/தமிழ் மத்திய மகா வித்தியாலயம்.

இரண்டாம் பரிசு-செல்வன்.டட்லி தர்மிகன், தரம்-12 வவு/தமிழ் மத்திய மகா வித்தியாலயம்.

மூன்றாம் பரிசு-செல்வன் V.கவியகன்,தரம்-9, வவு/தமிழ் மத்திய மகா வித்தியாலயம்

கிளிநொச்சி மாவட்டம்

முதலாம் பரிசு-செல்வன் J. சதுரங்க, தரம்-5, கிளி/ மத்திய ஆரம்ப வித்தியாலயம்.

இரண்டாம் பரிசு-செல்வன். J. அபிநயன், தரம் 8,கிளி/ மத்திய மகா வித்தியாலயம்.

மூன்றாம் பரிசு-செல்வன் S. அபிஷேக்,தரம் 6, கிளி/ மத்திய மகா வித்தியாலயம்.

முல்லைத்தீவு மாவட்டம்

முதலாம் பரிசு-செல்வி அனலநாதன் சதுர்சா,தரம் 12,

மு/கொக்குதொடுவாய் மகா வித்தியாலயம்.

இரண்டாம் பரிசு-செல்வி.மயில்வாசன் சுபேதா,தரம்-11, மு/யோகபுரம் மகா வித்தியாலயம்.

மூன்றாம் பரிசு-செல்வி அறிவழகு அபிஷனா,தரம்-11, மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம்.

மன்னார் மாவட்டம்

முதலாம் பரிசு-செல்வன் K. கிரிஸ் டார்வின் பீரிஸ்,தரம் 7,மன்/அரிப்பு றோ.க.த.க. பாடசாலை.

இரண்டாம் பரிசு-செல்வி.தர்மகுலசிங்கம் டுசந்தி, தரம்- 12, மன்/இலுப்பைக்கடவைமகா வித்தியாலயம்

மூன்றாம் பரிசு-செல்வி I.லதுசிகா, தரம்-9, மன்/கட்டையம்பன் மகாவித்தியாலயம்

இன்றைய நிகழ்வில் வைத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்களுக்கான பணப்பரிசில்கள் இந்தியத்துணைத் தூதுவர் மாண்புமிகு பாலச்சந்திரன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. தூதரக அதிகாரி திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களது நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :