மா விலையை மீண்டும் உயர்த்தியது பிரீமா!



J.f.காமிலா பேகம்-
லங்கையிலுள்ள முன்னணி கோதுமை மா விற்பனை நிறுவனமாகிய பிரீமா தனது உற்பத்திக் கலவையில் ஒன்றாகிய மில்க் பிரேண்ட் என்ற மா விலையை 3 ரூபா 50 சதத்தினால் அதிகரித்துள்ளது.

இன்று தொடக்கம் இந்த விலை அதிகரிப்பு அமுலில் உள்ளதாக அந்த நிறுவனம் கூறுகின்றது.

அதனடிப்படையில் 50 கிலோ பிரீமா மில்க் பிரேண்ட் மாப் பொதியின் விலை 4175 ரூபாவாகும்.

இதேவேளை ரொட்டி செய்வதற்கு அதிகமாக பயன்படுத்தப்படும் கோதுமை மாவின் விலையும் 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.

மில்க் பிரேண்ட் என்ற மாப் பொதி அதிகமாக பேக்கரி நிறுவனங்களால் கொள்வனவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :