நாடளாவிய ரீதியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளை மறுதினம் முதல் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசியினை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
மகப்பேற்று மற்றும் நரம்பியல் தொடர்பான விசேட வைத்தியர்களுக்கான நிலையத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டம் பிலியந்தலை சுகாதார வைத்திய உத்தியோகத்தர்கள் பிரிவில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு காசல் வீதியில் அமைந்துள்ள பெண்கள் வைத்தியசாலையிலும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் 08 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்துள்ளமையை அடுத்து குறித்த தரப்பினருக்கு தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமைய அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment