உயிர்களைப் பாதுகாக்க அச்சப்படாமல் முன்வாருங்கள் – ஓட்டமாவடி பிரதித் தவிசாளர் யூ.எல்.அஹமட்



எச்.எம்.எம்.பர்ஸான்-
கொ
ரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டால் அச்சம் கொள்ளாமல் தங்களது உயிர்களைப் பாதுகாக்க முன்வாருங்கள் என்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உப தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை தெரிவித்தார்.

கொரோனா அறிகுறிகளுடன் பலர் நீண்ட நாட்களாக வீடுகளில் இருந்து விட்டு கடைசி நேரத்தில் வைத்தியசாலைக்கு செல்வதாக வைத்தியர்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. அவ்வாறு செல்வதனூடாக பலர் உயிர்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

எனவே, கொரோனா என்றதும் அச்சம் கொள்ளாமல் தைரியமாக சென்று தங்களுக்கான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

தனக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை முடிந்து வீடு சென்றுள்ளேன். தனது ஆரோக்கியத்துக்காக பிரார்த்தனை செய்த மற்றும் தொலைபேசிமூலம் ஆறுதல் கூறிய உறவுகள் அனைவருக்கும் தனது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று உப தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :