இன்று நிட்டம்புவை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கஹட்டோவிட்ட கிராமத்தில் ஒருவர் வெள்ள நீருக்கு பலியாகி உள்ளார்.
இன்று பிற்பகல் நடந்த குறித்த சம்பவத்தில், 80/a, கஹட்டோவிட்ட, வெயாங்கொட என்ற விலாசத்தைசேர்ந்த, மொஹமட் லுக்மான் ஆக்கீப் அனாம் (18) என்பவரே இவ்வாறு வெள்ளநீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். இவர் மதுரங்குளி மேர்ஸி லங்கா (Mercy lanka school) என்ற பாடசாலையின் மாணவராவார்.
கஹட்டோவிட்ட மக்கள் கடும் பிரயத்தனப்பட்டு தேடுதல் நடாத்தியதால், ஒரு மணித்தியாலத்தில் மூழ்கியவரின் உடலை மீட்டு எடுத்தனர்.
தற்போது பிரேத பரிசோதனைக்காக அவரது ஜனாஸா வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை நிட்டம்புவை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
இந்தக்கிராமம் அடிக்கடி மழை காரணமாக வெள்ள அபாயத்தை எதிர் நோக்கும் ஒரு பிரதேசம் ஆகும். தற்போதும் சீரற்ற காலநிலை காரணமாக இக்கிராம மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment