பலநோக்கு அபிவிருத்தி செயலணியில் பயிலுனர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பப் படிவம் வழங்கும் நிகழ்வு.



றாசிக் நபாயிஸ்-
திமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் "செளபாக்கியத்தின் நோக்கு" கொள்கை பிரகடனத்திற்கு ஏற்ப வறுமை இல்லாத இலங்கையை உருவாக்கும் பிரதான குறிக்கோளின் அடிப்படையில் பலநோக்கு அபிவிருத்தி செயலணிக்கு கட்டங்கட்டமாக பயிலுனர்களை பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்ப
மருதமுனை, பெரியநீலாவணை மற்றும் பாண்டிருப்பு பிரதேசத்தில்
தெரிவு செய்யப்பட்ட பத்து இளைஞர், யுவதிகளுக்கு இவ்விண்ணப்பப் படிவம்

வழங்கும் நிகழ்வுநேற்று (07) பொது ஜன பெரமுன கல்முனை வடக்கு ஒருங்கிணைப்பாளர் ZA.நெளஷாட் தலைமையில் மருதமுனை அலுவலகத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதியின் அமைப்பாளர் கலாநிதி பஷீர் ஹுசைன், மருதமுனை பொதுஜன பெரமுன மத்திய குழுவின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி FMA.அன்ஸார் மௌலானா, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான WD.வீரசிங்கவின் கல்முனை தொகுதி இணைப்பாளரும், E-Best கல்வி நிறுவனத்தின் பணிப்பாளருமான PM.முஹம்மது ஜஹ்பர்,
பொது ஜன பெரமுன மருதமுனை கிளையின் தலைவர் ALM.முஸ்தபா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனை அமைப்பாளர் கலாநிதி வஸீர் ஹுசைனின் செயலாளரும், அபிவிருத்தி உத்தியோகத்தருமான ACM.றிஸ்வீன் போன்றோர்கள் கலந்து கொண்டு விண்ணப்ப படிவத்தை வழங்கி நிகழ்வை சிறப்பித்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :