பயணக் கட்டுப்பாட்டு காலத்தில் கொழும்பு நகரத்திற்குள் நுழையும் அத்தியாவசிய சேவை வாகனங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் புதிய முறையை பொலிஸ் முடிவு செய்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹனா கூறுகையில், இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய ஸ்டிக்கர் அமைப்பு முழு பயணக் கட்டுப்பாட்டு காலத்திற்கும் செல்லுபடியாகும்.
அதன்படி 11 துறைகளுக்கு வெவ்வேறு வண்ணங்களின் கீழ் ஸ்டிக்கர்கள் வழங்கப்படும்.
சுகாதார சேவைகள் – பச்சை
முப்படை /பொலிஸ் – நீலம்
அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் – சிவப்பு
அத்தியாவசிய சேவை பொருட்கள் – மஞ்சள்
இறக்குமதி / ஏற்றுமதி – பழுப்பு (Brown)
உணவு விநியோகம் – சாம்பல் (Grey)
தனியார் துறை – ஊதா
ஊடகம் – ஒரஞ்சு (Orange)
விமான பயணம் – வெள்ளை
அவசர நிலை – கருப்பு
கொழும்புக்குள் நுழையும் வாகனங்களுக்கு இந்த ஸ்டிக்கர்கள் நாளை வழங்கப்படும்.
0 comments :
Post a Comment