ஸ்ரீல‌ங்கா பொதுஜ‌ன‌ பெர‌முன‌ க‌ட்சி கண்டித்தமையை ஐக்கிய காங்கிரஸ் (உலமா) கட்சி வ‌ர‌வேற்கிற‌து.-மௌலவி முஹம்மத் ஸப்வான்



க்களை அசவுகரியத்தில் தள்ளும் தீர்மானத்தை இடைநிறுத்தி உரிய அமைச்சரை ஆளும் ஸ்ரீல‌ங்கா பொதுஜ‌ன‌ பெர‌முன‌ க‌ட்சி கண்டித்தமையை ஐக்கிய காங்கிரஸ் (உலமா) கட்சி வ‌ர‌வேற்கிற‌து.
இது ப‌ற்றி ஐக்கிய‌ காங்கிர‌ஸ் (உல‌மா) கட்சியின் உயர்பீட உறுப்பினரும் தேசிய கொள்கை ப‌ர‌ப்புச் செயலாளருமான மௌலவி முஹம்மத் ஸப்வான் தெரிவித்துள்ளதாவ‌து,

கொரோனாவால் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையில், எரிபொருட்களின் விலையை அதிகரித்து மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் எனவும் இவ்வாறான நிலைமையை தோற்றுவித்தது தொடர்பில் முழுப் பொறுப்பையும் ஏற்று பதவி விலக வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் அவர்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்தமை பாராட்டத்தக்க விடயமாகும்.

இதன் மூலம் மக்களின் நலனில் அக்கறையுள்ள அரசு என மீண்டுமொருமுறை நிரூபிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்க‌ம் பயணத்தடையை விதித்துள்ளது. இதனால் மக்களின் பொருளாதார நிலை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அடிப்படை தேவையாக உள்ள எரிபொருள் விலையை அதிகரிப்பதென்பது சாதாரண மக்களால் சகித்துக்கொள்ள முடியுமான ஒரு விடயமல்ல.
அரசாங்கம் இதன் பாரதூரத்தை அறிந்தது மாத்திரமல்லாமல் சம்பத்தப்பட்ட அமைச்சருக்கு உடன் நடவடிக்கை எடுக்க முற்பட்ட விடையம் மிக‌வும் வ‌ர‌வேற்புக்குரிய‌தாகும் என்ப‌து எம‌து க‌ட்சியின் க‌ருத்தாகும் என ஐக்கிய காங்கிரஸ் (உலமா) கட்சியின் உயர்பீட உறுப்பினரும் தேசிய கொள்கை ப‌ர‌ப்புச் செயலாளருமான மௌலவி முஹம்மத் ஸப்வான் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :