
கொவிட் -19 நோய்த்தொற்றுக்கு உள்ளாகும் பெரும்பாலான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நோயறிகுறிகள் காணப்படமாட்டாது அல்லது இலேசான நோயறிகுறிகள் காணப்படும் .

சிலருக்கு மாத்திரமே தீவிரமான நோய் ஏற்படும் .

தீவிரமான நோய் ஏற்படுபவர்களுக்கு குறைமாதப் பிரசவம் , கருச்சிதைவு மற்றும் சிசு இறப்பு போன்ற பாதகமான விளைவுகள் ஏற்படலாம் . அரிதாக கர்ப்பிணித்தாய் இறப்பும் ஏற்படலாம் .

சில கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஏனையவர்களுடன் ஒப்பிடும் போது , தீவிர நோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக காணப்படுகிறது .

தடுப்பூசி யாருக்கு வழங்கப்படும் ?
கொவிட் 19 இன் தீவிர நோய் ஏற்படுவதற்கான அதிக ஆபத்துள்ள கர்ப்பிணித் தாய்மார்கள்

ஆபத்துக் காரணிகள்

35 வயதிற்கு மேற்பட்டவர்கள்
ஈரல் நோய்கள்

நீரிழிவு நோய்

நோய் நிலை அல்லது மருந்துகள் காரணமாக குறைந்த நோய் எதிர்ப்புசக்தி உடையவர்கள்

உயர் குருதியமுக்கம்

புற்று நோய்

இருதய நோய்

உடல் உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உட்பட்டவர்கள்

தீவிர அஸ்மா போன்ற நாள்பட்ட சுவாச நோய்கள்

அதீத உடற்பருமன் ( BMI > 30 )

சிறுநீரக நோய்
உள நோய்கள் .

"மேலே குறிப்பிட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள் நிறைவடைந்த பின்னர் கொவிட் தடுப்பூசி வழங்கப்படும்."

இந்த தடுப்பூசி ஏற்றுதல் ....

கர்ப்ப காலத்தில் கொவிட் காரணமாக ஏற்படும் பாதகமான விளைவுகள் ஏற்படுவதற்கான ஆபத்தைக் குறைக்கும்

கர்ப்காலத்தில் கொவிட் காரணமாக குழந்தைகளில் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்கும்

இருப்பினும் , இந்த தடுப்பூசி காரணமாக சிசுக்களில் அல்லது பிறந்த குழந்தைகளில் ஏற்படும் நீண்ட கால விளைவுகள் தொடர்பாக இதுவரை ஆராயப்படவில்லை.

தடுப்பூசி ஏற்றுவதனால் கொவிட் -19 ஐ தடுப்பதற்கான பூரண பாதுகாப்பு கிடைப்தில்லை .

தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களும் பின்வரும் அனைத்து நோய்த்தடுப்பு நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் .

நெரிசலான இடங்களைத் தவிர்த்தல்

காற்றோட்டம் குறைவான பொது இடங்களைத் தவிர்த்தல்

வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது முகவுறையை அணிதல்

கைகளை சவர்காரமிட்டு நீரினால் கழுவுதல்

கொவிட் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோய் அறிகுறிகளுடைய குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தூர விலகியிருத்தல்

" குழந்தையின் புன்னகையைக் பார்ப்பதற்கு எமது உயிரைப் பாதுகாத்திடுவோம் "

தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின் உங்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் காணப்படுமாயின் அது தொடர்பாக உங்கள் பிரதேச குடும்ப சுகாதார உத்தியோகத்தருக்கு அல்லது சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிவிக்கவும்

சுகாதார ஆலோசனை
சேவையினை 1999 இந்த இலக்கத்தை அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் (தகவல் உதவி - சுகாதார மேம்பாட்டு பணியகம்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment