QRCS மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றுக்கு இடையில் சந்திப்பு



முஸாதிக் முஜீப்-
QRCS மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றுக்கு இடையில் மனிதாபிமான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து கத்தார் சர்வதேச உறவுகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் தலைவர் டாக்டர் Fawzi Oussedik மற்றும் சர்வதேச மேம்பாட்டுத் தலைவர் Naglaa Al-Hajj ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது கட்டாரில் உள்ள இலங்கை சமூகத்திற்கு சேவை செய்வதா அல்லது இலங்கையில் குறிப்பிட்ட சமூகங்களுக்கு உதவி வழங்குவதா என்பது பற்றி கலந்துறையாடப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் திரு. மொஹிதீன்,
தனது நாடு மூன்றாவது அலைக்கு மத்தியில் Covid-19 நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளில் வியத்தகு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றார். இதன் விளைவாக, மருத்துவமனைகள் அதிக நெரிசலில் உள்ளன. QRCS இன் மூலோபாய பங்காளியாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் ஒருங்கிணைப்பதன் மூலம் இலங்கை மக்களுக்கு உதவி வழங்குவதாக திரு அல்-ஹம்மடி உறுதியளித்தார். அதன் பிரகாரம் மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் மற்றும் பிற பொருட்களின் இடைவெளிகளை உடனடியாக நிவர்த்தி செய்ய சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

இது இரு நாடுகளுக்கும் இடையிலான நல்ல உறவையும், இலங்கையில் QRCS இன் கடந்தகால சாதனைகளையும் பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
அதன் பிரதிநிதித்துவ பணியாக ஏராளமான மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது, குறிப்பாக நீர், மற்றும் சுகாதாதத்துறையில், நூற்றுக்கணக்கான கிணறுகள் தோண்டப்பட்டு நீர் தொட்டிகள் மற்றும் குழாய்கள் நிறுவப்பட்டுள்ளன என்றும் கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் திரு. மொஹிதீன் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :