(Take-Home Rations) விநியோகத்திட்டம் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் தலைமையில்



Save the Children அரச சார்பற்ற நிறுவனத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் உணவுப்பங்கீடுகள் (Take-Home Rations) விநியோகத்திட்டம் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் தலைமையில் மொனராகலை மாவட்டத்தின் புத்தல, ஒக்கம்பிட்டிய, தம்பேயாய ஆரம்பப் பாடசாலையில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிதி அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சுடன் Save the Children அமைப்பு செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், பாடசாலை மாணவர்களின் கல்வியறிவு மற்றும் கவனத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தின் பேண்தகைமையை வலுப்படுத்தும் நோக்கில் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

கொவிட் நெருக்கடிகளுக்கு மத்தியில் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக பதுளை, மொனராகலை, கிளிநொச்சி, நுவரெலியா, இரத்தினபுரி, திருகோணமலை மாவட்டங்களிலுள்ள 887 ஆரம்பப் பாடசாலைகளில் கல்வி பயிலும் 110,000 மாணவர்களுக்கு இந்த உணவுப் பொதிகள் பகிர்தளிக்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அபன்வெல, மொனராகலை மாவட்டச் செயலாளர் குணதாஸ சமரசிங்க மற்றும் Save the Children அமைப்பின் பிரதானிகள் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :