இலங்கை கடலுக்கு ஏற்பட்ட நட்டத்தை செலுத்த X-Press தயார்.?



J.f.காமிலா பேகம்-
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக இலங்கை கடல்வளத்திற்கு ஏற்பட்ட பாதிப்பை கணித்து, சட்டமா அதிபர் ஊடாக சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனத்திற்கும், கப்பலின் சிங்கப்பூர் நிறுவனத்திற்கும் பத்திரம் வழங்க எதிர்பார்ப்பதாக வணிக கப்பல் செயலாளர் அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் செனவிரத்ன தெரிவிக்கின்றார்.

நட்டஈட்டுத் தொகையை செலுத்துவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார்.

தீ விபத்து காரணமாக இலங்கையின் கடல்வளத்திற்கு ஏற்பட்ட பாதிப்பினைக் கணித்து அறிக்கை ஒன்றை சமர்பிக்கும்படி குறித்த கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நட்டத்திற்கு ஏற்ற பணத்தொகையை செலுத்த அந்த நிறுவனம் தயார் எனவும் தெரிவித்திருப்பதாகவும் அஜித் செனவிரத்ன தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :