சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களில் உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு சமுர்த்தி சிப்தொற புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (27) செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு காசோலைகளை வழங்கி வைத்தார். சாய்ந்தமருதில் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களில் உயர்தரம் கற்கும் 101 மாணவர்களுக்கு இப்புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் தலா ஆயிரத்தி 500 ரூபா வீதம் 10 மாதத்திற்கான 15 ஆயிரம் பெறுமதியான காசோலைகள் இன்று (27) வழங்கப்பட்டன.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களில் உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் இப்புலமைப் பரிசிலூடக மாதம் ஒன்றுக்கு 1500 ரூபா வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment