கொவிட் காரணமாக கல்வி அமைச்சினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற தொலைக்கல்வி நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக சம்மாந்துறை வலயத்தில் 16 பாடசாலைகள் தொலைக்கல்வி வள நிலையங்களாக( Distance Learning Resource Centres (DLRC))தெரிவு செய்யப்பட்டுள்ளன .
குறித்த 16 வள நிலையங்களும் இன்று(5)திங்கட்கிழமை காலை 7.30மணிக்கு தமது பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கின்றன என சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் தெரிவித்தார்.
இவ்வள நிலையங்களின் செயற்பாடுகள் இன்று திங்கட் கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளதால் இவ்வள நிலையங்கள் அமைந்துள்ள பாடசாலைகளின் இபிஎஸ்ஜ இணைப்பாளர்கள் அதிபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி இதன் செயற்பாடுகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு ஒத்துழைப்புகளை வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சம்மாந்துறை வலயத்தில் தெரிவான 16வள நிலையங்களும் பின்வரும் பாடசாலைகளில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி ,அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி, தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயம், அல்அர்சத் மகாவித்தியாலயம், செந்நெல்சாஹிறா மகாவித்தியாலயம், அல்அஸ்ஹர் வித்தியாலயம் ,மல்வத்தை விபுலாநந்தா மகாவித்தியாலயம் ,மஜீட்புரம் மகாவித்தியாலயம், நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயம், அஸ்ஸிறாஜ் மகாவித்தியாலயம், றாணமடு இந்து மகாவித்தியாலயம் ,மத்தியமுகாம் மத்திய கல்லூரி ,சொறிக்கல்முனை ஹொலிகுறோஸ் மகாவித்தியாலயம் ,இறக்காமம் அஸ்ரப் மத்திய கல்லுரி, அல்அமீன் மகாவித்தியாலயம், வாங்காமம் ஒராபிபாஷா வித்தியாலயம் ஆகிய 16பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு வளநிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அங்கு காலை 7.30மணிமுதல் பிற்பகல் 3.30மணிவரை பாடங்கள் ஆசிரியர்களால் போதிக்கப்படவுள்ளன.
0 comments :
Post a Comment