நேற்று சம்மாந்துறை வலயத்தில் 16 தொலைக்கல்வி வள நிலையங்கள் ஆரம்பம்



வி.ரி.சகாதேவராஜா-
கொவிட் காரணமாக கல்வி அமைச்சினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற தொலைக்கல்வி நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக சம்மாந்துறை வலயத்தில் 16 பாடசாலைகள் தொலைக்கல்வி வள நிலையங்களாக( Distance Learning Resource Centres (DLRC)) நேற்று(5)திங்கட்கிழமை செயற்படத்தொடங்கியுள்ளன.
குறித்த 16 வள நிலையங்களும் நேற்று(5)திங்கட்கிழமை காலை 7.30மணிக்கு தமது பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தன.

வலயத்திலுள்ள 3கோட்டங்களான சம்மாந்துறை ,நாவிதன்வெளி , இறக்காமம் ஆகிய கோட்டங்களில் பிரதான வைபவங்கள் சுகாதாரமுறைப்படி 3பாடசாலைகளில் நடந்தேறியது.
சம்மாந்துறைக்கோட்டத்திற்குரிய பிரதான நிகழ்வு செந்நெல் சாஹிறாக் கல்லூரியில் நடைபெற்து. சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வளநிலையத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.

அதேபோன்று நாவிதன்வெளிக்கோட்டத்திற்குரிய பிரதான நிகழ்வு நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் நடைபெற்து. சம்மாந்துறை வலயபிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி நிதர்சினி மகேந்திரகுமார் பிரதம அதிதியாகக் லந்துகொண்டு வளநிலையத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.பாடசாலை இணைப்பாளரான உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜாவும் கலந்துசிறப்பித்தார்.

இறக்காமக்கோட்டத்திற்குரிய பிரதான நிகழ்வு அஸ்ரப் மத்திய கல்லூரியில் நடைபெற்து. இறக்காமக்கோட்டக்கல்விப்பணிப்பாளர் மகுமூத்லெவ்வை பிரதம அதிதியாகக் லந்துகொண்டு வளநிலையத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.
சம்மாந்துறை வலயத்தில் தெரிவான 16வள நிலையங்களும் பின்வரும் பாடசாலைகளில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி ,அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி, தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயம், அல்அர்சத் மகாவித்தியாலயம், செந்நெல்சாஹிறா மகாவித்தியாலயம், அல்அஸ்ஹர் வித்தியாலயம் ,மல்வத்தை விபுலாநந்தா மகாவித்தியாலயம் ,மஜீட்புரம் மகாவித்தியாலயம், நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயம், அஸ்ஸிறாஜ் மகாவித்தியாலயம், றாணமடு இந்து மகாவித்தியாலயம் ,மத்தியமுகாம் மத்திய கல்லூரி ,சொறிக்கல்முனை ஹொலிகுறோஸ் மகாவித்தியாலயம் ,இறக்காமம் அஸ்ரப் மத்திய கல்லுரி, அல்அமீன் மகாவித்தியாலயம், வாங்காமம் ஒராபிபாஷா வித்தியாலயம் ஆகிய 16பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு வளநிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அங்கு காலை 7.30மணிமுதல் பிற்பகல் 3.30மணிவரை பாடங்கள் ஆசிரியர்களால் போதிக்கப்படவுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :