இருப்பினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு மேலும் இரண்டு வாரங்களுக்கு அமுலில் இருக்கும் என்று சுகாதார சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தனவின் கையொப்பத்துடன் நேற்று (04) பிற்பகல் வெளியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் சில கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் அதில் குறிப்பிபடப்பட்டுள்ளது.
பயணக்கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து சில பேச்சுவார்த்தைகள் கடந்த காலங்களில் இடம்பெற்றன. அதன ;அடிப்படையிலேயே இந்தத் தீர்மானங்கள் எட்டப்பட்டன.
பொதுப் போக்குவரத்து சேவைகளில் ஆசன எண்ணிக்கையில் 50 வீதமானோருக்கு மாத்திரம் பயணிக்க முடியும்
மேல் மாகாணத்தில், ஆசன எண்ணிக்கையில் 30 வீதமானோர் மாத்திரம் பயணிக்க முடியும்
தனியார்/ வாடகை வாகனங்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் ஆசன எண்ணிக்கைக்கேற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி.
திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதியில்லை, எவ்வாறாயினும் மணமகன் மற்றும் மணமகள் உள்ளிட்ட 10 பேரின் பங்குபற்றலுடன் பதிவுத் திருமணத்தை நடத்த முடியும்.
ஒருவர் உயிரிழந்தால், சடலத்தை பொறுப்பேற்று 24 மணித்தியாலங்களில் இறுதிச் சடங்குகளை முன்னெடுக்க வேண்டும், இறுதிக்கிரியைகளில் 15 பேர் மாத்திரமே கலந்துகொள்ள முடியும்
செயலமர்வு, மகாநாடு, வர்த்தக குறி வெளியீடு ஆகிய நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு 25 பேருக்கு இனுமதி
ஆடைத்தொழிற்சாலை உள்ளிட்ட தொழிற்சாலைகளை நடத்துவதற்கு அனுமதி.
நிதி நிறுவனங்கள் ஆகக்குறைந்த ஊழியர்களுடன் செயல்பட அனுமதி: எந்த சந்தர்ப்பத்திலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
திரையரங்குகள், பூங்காக்கள், கடற்கரைகள், நீச்சல் தடாகங்கள், மதுபானசாலைகள், கெசினோ மற்றும் இரவுநேர களியாட்ட விடுதிகள், சூதாட்ட நிலையங்களை திறப்பதற்கு அனுமதியில்லை.
மசாஜ் நிலையங்களை திறக்க அனுமதி
திறந்த வெளி சந்தை வாராந்த சந்தை உள்ளூராட்சி மன்றங்களின் வலுவான கட்டுப்பாடுகளுடன் இடமபெற முடியும்.
பொருளாதார மத்திய நிலையங்கள் மொத்த வர்த்தக நடவடிக்கைகளுக்காக மாத்திரம் திறக்க முடியும்.
ஜவுளி கடைகள் ,தொடர்பாடல் நிலையங்கள் முதலானவற்றுக்கு அனுமதி
0 comments :
Post a Comment