கொவிட் 19 தொற்று நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் சிகிச்சை நிலையமாக மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பு தள ஆயுர்வேத வைத்தியசாலையின் ஒரு பகுதி மாற்றியமைக்கப்பட்டு (16) திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சுதேச மருத்துத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதன்போது, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் மற்றும் மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர் ஆகியோரினால் கொவிட் 19 தனிமைப்படுத்தும் சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டு சிகிச்சை நிலையத்துக்குத் தேவையான பொருட்களையும் வழங்கி வைத்தனர்.
கொரோனாத் தொற்றுப் பாதிப்புக்குள்ளனா 100 நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் சிகிச்சை நிலையமாக மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பு தள ஆயுர்வேத வைத்தியசாலையின் ஒரு பகுதி மாற்றியமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் திருமதி ஜெயலட்சுமி பாஸ்கரன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment