கொவிட் 19 தொற்றிலிருந்து பூரண சுகமடைந்து வெளியேறியவர்களுக்கான நோய் நிர்ணய அட்டைகளை வழங்கிய கிழக்கு மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர்



பைஷல் இஸ்மாயில் -
கொவிட் 19 நோய் தொற்று காரணமாக அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 3 தொற்றாளர்கள் நேற்றயதினம் (08) பூரண சுகம் பெற்று வெளியேறினார்கள். அவர்களுக்கான நோய் நிர்ணய அட்டைகளை கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர் தாதிய உத்தியோகத்தரிடம் வழங்கி வைத்தார்.

கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளரும், நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான டொக்டர் எம்.ஏ.நபீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டொக்டர் எம்.பி.எம்.றஜீஸ், கொவிட் 19 தடுப்பு சிகிச்சை நிலையப் பொறுப்பதிகாரி டொக்டர் ஐ.எல்.அப்துல் ஹை, சுதேச மருத்துவ திணைக்கள கணக்காளர் என்.பாலநந்தன், நிருவாக உத்தியோகத்தர் திருமதி. எஸ்.நவேந்திரராஜா உள்ளிட்ட வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது, கொவிட் 19 சிகிச்சையாளர் பிரிவுகளில் நிலவும் பிரச்சினை, நோயர்களுக்கு வழங்கும் சிகிச்சை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் பற்றிய ஆராய்ந்த அதேவேளை கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களிடம் நோய் பற்றிய தகவல்களையும், அவர்களின் தற்போதை உடல் நிலை பற்றியும் மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர் கேட்டறிந்து கொண்டார்.

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை கொவிட் 19 தனிமைப்படுத்தும் சிகிச்சை நிலையமாக கடந்த 2021.06.21 ஆம் திகதி மாற்றியமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இன்றுவரை 100 கொவிட் 19 தொற்றாளர்கள் அனுமதிமக்கப்பட்டு 65 பேர் பூரண சுகம் பெற்று வெளியேறியுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :