200 கடல்வாழ் உயிரினங்களை கொன்றது X-Press Pearl கப்பல்-வெளிவந்த அதிர்ச்சி தகவல்!



J.f.காமிலா பேகம்-
க்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து காரணமாக தற்போது கடல் மாசு அதிகரித்து கொண்டேசெல்கின்றது .

176 கடலாமைகள், 4 சுறாக்கள் மற்றும் 20 திமிங்கிலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

எக்ஸ்பிரஸ் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

இதன்போது பிரசன்னமாகிய குற்றப் புலனாய்வுப்பிரிவின் சார்பான பிரதி சொலிசிடர் ஜெனரல் மாதவ தென்னகோன், இந்த தகவலை வெளியிட்டார்.

இந்தத் தீவிபத்தைத் தொடர்ந்து கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி நாடளாவிய ரீதியில் சுமார் 26 விசாரணைகள் நீதிமன்றங்களில் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :