தமிழ் , முஸ்லிம் மற்றும் சிங்களம் ஆகிய மூவினங்களையும் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோரும் இச்சந்தைக்கு வருகை தந்திருந்தனர்.
சுகாதார விதிமுறைகளைப்பேணி சந்தையின் நடவடிக்கைகள் நடைபெற்றவேளை மீராகேணி கிராம அபிவிருத்திச்சங்கத்தினர் நுகர்வோருக்கும் வியாபாரிகளுக்கும் முகக்கவசங்களை இலவசமாக வழங்கியதை அவதானிக்க முடிந்தது.
மீராகேணிச் சந்தை பிரதி வியாழக்கிழமைகளில் மாத்திரம் கூடுகின்றபோதிலும் ஹஜ்பெருநாளை முன்னிட்டு பிரதேச மக்களின் நலன்கருதி விசேடமாகக் கூடியது.
ஆடைகள், மரக்கறிவகைகள், பழவகைகள் மற்றும் மளிகைப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்துவகையான பொருட்களும் இங்கு விற்பனை செய்யப்பட்டன.
0 comments :
Post a Comment