நேற்று 23பேருக்கு தொற்று: ஒருவர் பலி! பொத்துவில் நிலைமை மோசமாகிறது!


காரைதீவு சகா-

ல்முனைப்பிராந்தியத்திலுள்ள பொத்துவில் சுகாதார அதிகாரிப் பிரதேசத்தில் கொரோனாத் தொற்று அதிகரித்துவருகிறது.

அங்கு கடந்த இரு வாரங்களில் 170பேருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளது என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை தெரிவித்தது.

நேற்றுக்காலை நடாத்திய அன்ரிஜன் சோதனையின்போது 23பேர் தொற்றுக்கு இலக்காகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது பொத்துவில் 9(குண்டுமடு) கிராமசேவையாளர் பிரிவில் இனங்காணப்பட்டுள்ளது.

இதனால் அப்பிரிவை முடக்க கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தேசிய கொவிட் செயலணிக்கு பரிந்துரை செய்துள்ளார்.

பொத்துவில் சுகாதாரப்பிரிவில் 13 ஆம் கிராம அலுவலர் பிரிவு முடக்க பட்டுள்ளது தெரிந்ததே.

அப் பகுதியில் உள்ள 94 வயதான நபர் நேற்று கொரனா தொற்றின் காரணமாக உயிர் இழந்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :