கொரோனாவுக்கு சமுகசேவையாளர் லயன் தங்கவேல் பலி! காரைதீவில் 4வது கொரோனா மரணம்



வி.ரி.சகாதேவராஜா-
காரைதீவைச்சேர்ந்த பிரபல சமுகசேவையாளர் தேசமான்ய விபுலநேசன் லயன் சின்னதம்பி தங்கவேல் (வயது 75) கொரோனா காரணமாக நேற்று(5)திங்கட்கிழமை காலை காலமானார்.

ஓய்வுநிலைப் பொறியியலாளரான இவர் ,காரைதீவு விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றத்தின் ஆலோசகராகவும், காரைதீவு ஓய்வூதியர்சங்கத்தின் தலைவராகவும் ,மற்றும் பல முன்னணி அமைப்புகளில் பிரதான பாகமெடுத்து சேவையாற்றிவந்தவராவார்.

'தங்கவேல் மாமா' என பலராலும் நன்கு அறியப்பட்ட இவர், கல்முனை லயன்ஸ் கழகத்திலும் ,பலசமுக அமைப்புகளிலும் கந்தசாமிஆலயம் உள்ளிட்ட சமய நிறுவனங்களிலும் முன்னின்று பணியாற்றிவந்தவராவார்.

காரைதீவு பிரதேச சபை அபிவிருத்தி குழுவின் ஆலோசகசபை உறுப்பினரான இவர், விவேகானந்த விளையாட்டுக்கழகத்தின் முகாமையளராவார்.

கடந்தவாரம் கொரோனாத் தொற்றுக்கு இலக்கான இவர், கல்முனை அஸ்ரப் ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றுக்காலை சிகிச்சை பலனின்றி மரணமானார்.


காரைதீவு சுகாதாரவைத்தியஅதிகாரி பிரிவில் கொரோனாவுக்கு பலியான நான்காவது மரணம் இவருடையதாகும். இவரது பிரேதம் அம்பாறையில் சுகாதாரமுறைப்படி நேற்று தகனம்செய்யப்பட்டது.


அதேவேளை ,அன்னாருக்கு ஆத்மார்த்த பிரார்த்தனையும் இறுதி அஞ்சலி நிகழ்வும் நேற்றுமாலை காரைதீவு விபுலாநந்த பணிமன்ற ஏற்பாட்டில் மணிமண்டபத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தகக்து.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :