நெடுந்தீவில் சீனாவிற்கு 80 ஏக்கர்! யாழ் பழைய கச்சேரி சீனாவிற்கா? - பாராளுமன்றில் சிறீதரன் கேள்வி



யாழ் லக்சன்-

நெடுந்தீவில் சீனாவிற்கு 80 ஏக்கர்! யாழ் பழைய கச்சேரி சீனாவிற்கா? அதற்காகவா நாமல் யாழ் வந்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் யாழ்ப்பாணம் வந்த பாகிஸ்தான் தூதுவர் மண்டைதீவில்தான் தங்கியிருந்துள்ளார். மண்டைதீவு, அல்லைப்பிட்டி பகுதிகளை பார்வையிட்டுள்ளார். இது எமக்கு பலத்தை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிற்கு அண்மையிலுள்ள அல்லைப்பிட்டியில் பாகிஸ்தான் நிறுவனமொன்று ஹொட்டல் கட்ட முயன்ற போது, கடந்த காலங்களில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது புதிய முயற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதா?

நெடுந்தீவில் 40 ஏக்கர் காணி வீதம் சீனாவை சேர்ந்த இரண்டு தனி நபர்களிற்கு வழங்கப்படவுள்ளது. இது சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட போகிறது. அதே போலஇ ஒல்லாந்து கால யாழ்ப்பாண பழைய கச்சேரி கட்டிடத்தையும் சீன நிறுவன ஒன்றிற்கு நட்சத்திர விடுதி அமைக்க வழங்கும் முயற்சிகள் நடக்கிறது. அதற்காக தான் நாமல் அண்மையில் யாழ் வந்தார் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேலும்தெரிவித்தார்.



Attachments area

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :