யாழ் நெடுந்தீவுப் பகுதியில் இலங்கை வங்கிக் கிளையில் விரைவில் ATM இயந்திரம் பொருத்த நடவடிக்கை.

யாழ் லக்சன்-

நெடுந்தீவுப் பிரதேசத்தில் இலங்கை வங்கிக் கிளையில் ATM இயந்திரம் பொருந்தும் பணிகள் தற்போது முழுவீச்சில் இடம்பெறுகின்றது.

கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி யாழ் தீவகங்களுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பனை,தென்னை, கித்துள் மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் கௌரவ அருந்திக பெர்ணாண்டோ அவர்கள், நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் கலந்துரையாடலொன்றை நடாத்தியிருந்தார்.

அச்சந்திப்பில், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் இவ்விடயம் தொடர்பாக குறிப்பிட்டு, பிரதேச அபிவிருத்தி கலந்துரையாடல்களிலும் இவ் விடயம் பற்றி கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவித்திருந்ததோடு, இப்பிரச்சனைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

அங்கஜன் இராமநாதன் அவர்களின் கோரிக்கையை ஏற்ற இராஜாங்க அமைச்சர், இலங்கை வங்கி பொது முகாமையாளருடன் கலந்துரையாடி இலங்கை வங்கியின் (CRM) இயந்திரம் விரைவில் நிறுவப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் என அக்கூட்டத்தில் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :