சிறு பான்மை மக்களுக்காகவும், நாட்டின் தேசிய‌ ந‌ல‌னுக்காக‌வும் குரல் எழுப்ப வேண்டும்.-ஆதில்



சிறு பான்மை மக்களுக்காகவும், நாட்டின் தேசிய‌ ந‌ல‌னுக்காக‌வும் குரல் எழுப்ப வேண்டும் என அண்மையில் ஐக்கிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்ட கிண்ணியாவைச் சேர்ந்த முஹம்மத் ஆதில் தெரிவித்துள்ளார்.

23 வ‌ய‌து இளைஞ‌ரான‌ முஹம்மத் ஆதில் ஐக்கிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். நல்ல பேச்சாற்றலும் உண்மையான நேர்மையான அரசியலிலும் ஈடுபாடுள்ள அவர் க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் அவ‌ர்க‌ளால் க‌ட்சியின் கிண்ணியா அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிக அளவிலான இணைப்பாட விதான போட்டிகளில் தேசிய மட்டம் வரை சாதனைகள் படைத்து இலங்கையின் சிறந்த விவாதி விருதும் சிறப்பு பேச்சாளர் விருதும் பல தடவைகள் பெற்றுள்ளார். சிறு வயதில் இருந்து அரசியல் பயணத்தில் விருப்பம் கொண்டுள்ளார். சமூக சேவையில் அதிக‌ அக்கறையுடன் ஈடுபட்டு வருகின்றார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவம் புறநிலை கல்வியை டிப்ளோமா பாடநெறியாக முடித்துள்ளார். அத்துட‌ன் வளர்ந்து வரும் ஊடகவியலாளாராவார்.
மேலும் மறைந்த அறிவிப்பாளர் A R M ஜிப்ரி ஆசிரியர் அவர்களின் மாணவனாக‌ இருந்து இலங்கையின் அறிவிப்பாளர் போட்டியில் 2 தடவை வெற்றி பெற்றும் உள்ளார்.

ச‌மூக‌த்துக்கான‌ அரசியல் செயற்பாட்டில் இது வரையில் பல அரசியல் வாதிகளுடன் பயணித்து சமூக மட்டத்தில் மக்களுக்காகன பல உதவிகளை மேற்கொண்டும் வருகின்றார்.

சிறு வயதில் இருந்து அரசியல் மேடைகளில் தனது பேச்சாற்றலை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

சிறு பான்மை மக்களுக்காகவும், நாட்டின் தேசிய‌ ந‌ல‌னுக்காக‌வும் ஐக்கிய காங்கிரஸ் (உல‌மா) க‌ட்சியின் பயணத்தின் ஊடாக குரல் எழுப்ப வேண்டும் என்ற‌ ஆர்வ‌த்துட‌ன் செயல்படவுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :