வங்காளாதேசின் உயா் ஸ்தாணிகா் தாரிக் மிட் ஆரிபுல் இஸ்லாம் அவா்கள் இலங்கைத் துறைமுக அதிகார சபையின் தலைவர் கெப்டன் நிகால் ஹெட்டிப்பொல அவா்களை இலங்கைத் துறைமுக அதிகார சபையில் வைத்து 08.07.2021 சந்தித்துக் கொண்டனா்.
இச் சந்திப்பின்போது இருவரும் வங்களாதேஸ் - இலங்கை நட்புறவு மற்றும் வங்களாதேஸ் துறைமுகம் நிறுவனம் நீண்டகாலமாக இலங்கையின் துறைமுகம் கப்பல்துறை கொள்கலன் சம்பந்தமான போக்குவரத்துத்துறையில் வங்களாதேஸ் இலங்கையுடன் நீண்டகாலமாக வாடிக்கையாளராக உள்ளது பற்றியும் கருத்துக்கள் தெரிவித்தனா்.
வங்களாதேஸ் உயா் ஸ்தாணிகா் கருத்துத் தெரிவிக்கையில் இலங்கைத் துறைமுகம் தெற்காசியாவில் ஒரு சிறந்த துறைமுகமாகக் கட்டியெழுப்படுவதை பாராட்டுவதாகவும் எதிா்காலத்தில இத்துறையில் எமது வங்களாதேஸ் கப்பல் போக்குவரத்து பொருட்கள் இறக்குமதியில் மேலும் பல நன்மை பயக்கும். அத்துடன் வங்களாதேஸ் துறைமுக அபிவிருத்திக்கும் பல திட்டங்களை பரிமாறிக் கொள்ள உள்ளதாகவும் தொடா்ந்தும் இலங்கைத் துறைமுக சேவையில் வங்களாதேஸ் நீண்ட கால வாடிக்கையாளராக தொடா்ந்தும் இருக்கும் எனவும் வங்களாதேஸ் உயா் ஸ்தானிகா் அரிபுல் இஸ்லாம் தெரிவித்தாா்.
அத்துடன் இரு தலைவா்களும் ஞாபகச் சின்னங்களையும் வழங்கி பரிமாறிக்கொண்டனா்.
0 comments :
Post a Comment