நூருல் ஹுதா உமர்-
அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச மாவடிப்பள்ளியிலிருந்து கல்முனை வரையான பாதையை காபட் வீதியாக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீதி அபிவிருத்தி திட்டத்தை நிறுத்தும் படி காரைதீவில் உள்ள சிலர் கோருவதை ஐக்கிய காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டித்திருப்பதுடன் இது அரசின் அபிவிருத்தியை முடக்கி மக்கள் மத்தியில் அரசு எதுவும் செய்வதில்லை என காட்டும் மக்கள் விரோத முயற்சியாகும் என்றும் தெரிவித்துள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,
யுத்த காலத்தின் போது காரைதீவு சந்தி வழியாக வர அச்சப்பட்ட முஸ்லிம் விவசாயிகள் மேற்படி கிறவல் வீதியையே தமது போக்குவரத்துக்கு பயன்படுத்தினர்.

அவ்வீதியை 50 அடி அகலத்தில் செப்பனிடும்படி நாம் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் காலம் முதல் கோரிக்கை விடுத்து வருகிறோம். தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சௌபாக்ய தக்ம திட்டத்தின்கீழ் ஒரு லட்சம் கிலோ மீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தின்கீழ் மாவடிப்பள்ளியிலிருந்து வயல் பிரதேசத்தினூடாக கல்முனை வரையுள்ள மேற்படி 5 கிலோமீற்றர் நீள அணைக்கட்டு வீதியை கார்பெட் வீதியாக்கும் வேலைகள் நடைபெறுவது மிகவும் பாராட்டுக்குரிய விடயமாகும்.
காரைதீவு மேற்குப்பிரதேச வயல் காணிகளுக்குத் தேவையான தண்ணீர் பெறும் வசதியை இந்தத்திட்டம் தடை செய்யும் என்பது வலிந்து சொல்லப்படும் காரணமாகும். ஏற்கனவே 10 அடி கிறவல் வீதி கல்முனை வரை உள்ளது. வீதி கார்ப்பட் இல்லாத காலத்திலும் முறையான நீர்ப்பாசன வாய்க்கால் திட்டம் இல்லாததன் காரணமாக ஊருணியில் வெள்ளம் தேங்கியதை கண்டு வந்துள்ளோம். தற்போது இந்த வீதி அபிவிருத்தி செய்யப்பட்டு சரியான வடிகாண் திட்டமும் செய்யப்படும் என தெரிகிறது.
பொதுவாக தமிழ், முஸ்லிம்களுக்கும் நன்மை கிடைக்க கூடிய எதற்கும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களிடையே உள்ள ஒரு கூட்டம் எதிர்ப்புத்தெரிவிப்பது வழமையான ஒன்று. ஆகவே மேற்படி வீதியின் அபிவிருத்தியை தொடர்ந்தும் முன்னெடுக்கும் படி அரசின் பங்காளிக்கட்சி என்ற வகையில் ஐக்கிய காங்கிரஸ் (உலமா) கட்சி அரசைக்கோரியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments :
Post a Comment