டெல்ட்டா தொற்றுக்குள்ளான இன்னும் இருவர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

J.f.காமிலா பேகம்-

டெல்ட்டா தொற்றுக்குள்ளான இன்னும் இருவர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதில் ஒருவர் தொம்ப்பே பிரதேச செயலக பிரிவில் உள்ள கிரிந்திவல ஹித்எல்ல-திவானகன்ந்தெஹியில் வசிக்கும் கடற்படையைச்சேர்ந்த ஒருவருக்கே தொற்று ஏற்பட்டுள்ளது.

சுகாதார பிரிவின் அத்யட்சகர் விசேஷ வைத்தியர் ரஞ்சித் பட்டுவத்துடாவே இதுபற்றித்தெரிவிக்கையில் " கொழும்பு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டதாக கூறினார்.

இந்த தொற்றாளர் எந்தப்பிரதேசத்தை சேர்ந்தவர் என இதுவரை அடையாளப்படுத்தப்படவில்லை. இருப்பினும் தொம்ப்பே கிரிவானகந்த பிரதேசத்தை சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் கடந்த 26ம் திகதி பூசா முகாமிலிருந்து இப்பிரதேசத்திலுள்ள வீட்டுக்கு வந்து 28 ம் திரும்பவும் பூசாமுகாமிற்கு கடமைக்கு திரும்பி உள்ளார்.

கொழும்பு மற்றும் கம்பஹாவில் டெல்டா தொற்று மேலும் பரவலாம் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கொழும்பு உட்பட பல இடங்களிலும் திரிபடைந்த டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் உள்ள பலரது மாதிரிகள் தற்சமயம் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன.

சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் இந்த தகவலை வெளியிட்டார்.

கொழும்பு மாநகர சபைப் பிரதேசத்திற்குட்பட்ட 25 பேரில் 14 பேரது மாதிரிகள் டெல்டா பரிசோதனைக்காக கொழும்பு பல்கலைக்கழகத்திலுள்ள ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.இந்த நிலையில், குறித்த கடற்படை சிப்பாயின் பிரதேசத்தில் இருந்து இதுவரை 179 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களது மாதிரிகள் தற்போது டெல்டா பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இலங்கையில் டெல்டா திரிபடைந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இன்றுடன் 21ஆக உயர்ந்துள்ளது.

கொழும்பு – தெமட்டகொடவில் 5 டெல்டா தொற்றாளர்கள் ஆரம்பத்தில் இனங்காணப்பட்டிருந்ததோடு, பின்னர் கொழும்பு மாநகர சபை பிரதேசம், காலி, மாத்தறை என பலஇடங்களிலும் 14 டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :