தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியராக சப்ராஸ் நவாஸ்!



தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ தகவல் தொழில்நுட்பத் திணைக்களத்தின் தலைவர் எஸ். சப்றாஸ் நவாஸ் முகாமைத்துவத் தகவல் தொழில்நுட்பத்தில் பேராசிரியராகப் (Professor in Management and Information Technology) பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இவருக்கு இப்பதவியுயர்வு 12.08.2020 ஆம் திகதியிலிருந்து செயற்படும் வண்ணம் வழங்கப்படுகின்றது.

முகாமைத்துவ வர்த்தக பீடத்தில் முகாமைத்துவ தகவல் தொழில்நுட்பத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றிக்கொண்டிருக்கும் இவர் இப்பீடத்தின் இளம் பேராசிரியராகத் தனது 42 வது வயதில் பதவியுயர்வு பெறுவதோடு இலங்கையில் இத்துறையில் பேராசிரியர் பதவியைப் பெற்றுக்கொள்ளும் முதலாவது முஸ்லிம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஓய்வுபெற்ற ஆசிரியர் மர்ஹூம் ஏ.எல் சம்சுதீன் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியை மர்ஹூம் எம்.ஐ. பாத்துமுத்து (நல்லம்மா ஆசிரியை) ஆகியோரின் கடைசிப் புதல்வரான இவர், தனது ஆரம்பக்கல்வியை கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் பெற்றுக்கொண்டதுடன், கல்விப் பொதுத்தராதர உயர்தரம் வரையிலான கல்வியைக் கல்முனை சாஹிறா தேசிய கல்லூரியில் பெற்றுக் கொண்டார்.

பின்னர் இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வியாபார நிருவாகமானி பட்டத்தை Information Systems பிரிவில் விசேட கற்கையை மேற்கொண்டு முதற்தர சித்தியை பெற்றதுடன், இலங்கைத் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (Sri Lanka Institute of Information Technology) தனது விஞ்ஞான முதுமானிப் பட்டத்தையும் Information Systems இல் கற்று அங்கும் மேன்மைச் சித்தியோடு (Distinction Pass) Best Performance விருதையும் பெற்றவராவார்.

இவர் தனது ஆய்வுக்கட்டுரைகளை சர்வதேச ஆய்வரங்குகளில் சமர்ப்பித்து சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்கான விருதுகளை மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் பெற்றுக் கொண்டதோடு கடந்த வருடம் ஐக்கிய ராச்சியத்திலுள்ள உலகப்புகழ்பெற்ற Emerald Publishing நிறுவனத்தின் ஆய்வுச் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட தனது ஆய்வுக் கட்டுரைக்கு சிறந்த ஆய்வுக்கட்டுரைக்கான விருதையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :