உதயபுரம் மயானவீதி விவகாரம் சிக்கலின்றி நிறைவுறும் நம்பிக்கை! சம்மாந்துறை தவிசாளரிடம் பேசியபின் காரைதீவு தவிசாளர் கருத்து.



வி.ரி.சகாதேவராஜா-
ம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட உதயபுரம் கிராம மயானத்திற்குச்செல்லும் வீதிப்பிரச்சினை விவகாரம் சிக்கலின்றி நிறைவுறும் என நம்புவதாக நேற்று அங்கு விஜயம்செய்த காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

உதயபுரம் மயானவீதி நிருமாணம் இனவாதக்குழுவொன்றினால் அண்மையில் தடங்கலுக்குள்ளானபோதிலும் சம்மாந்துறை பிரதேசசபைத் தவிசாளர் எ.எம்.நௌசாட் பிரதேசசெயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா பள்ளிவாசல் குழுவினர் உள்ளிட்ட புத்திஜீவிகள் கல்விமான்கள் இவ்வீதி அமைக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாகவிருக்கின்றனர்.

குறித்த மயானவீதி பொலிஸ்நிலையச்சந்தியிலிருந்து போடப்பட்டுவந்தவேளையில் இன்னும் 30மீற்றர் இருக்கையில் இப்பிரச்சினை காரணமாக வீதியமைப்பு தடைபட்டுள்ளது.அதனை தொடர்ச்சியாக போட்டு முடிக்கவேண்டும் என்பதே அம்மக்களின் கோரிக்கையாகும். தமது அந்திமகால கடமைக்காக செல்லும் காலாகாலமாக பயன்படுத்தப்பட்டுவந்த ஒரேயொருபாதை இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை நேற்று அங்குவிஜயம்செய்த தவிசாளரிடம் உதயபுர மக்கள் தெளிவாக எடுத்துரைத்தனர்.

அங்கு தவிசாளர் ஜெயசிறில் மேலும் கருத்துரைக்கையில்:
இனஜக்கியத்திற்கு பெயர்போன பிரதேசம் சம்மாந்துறையாகும். அங்கு சிறுபான்மையாக வாழும் தமிழ்மக்களை பாதுகாப்பளித்து அரவணைத்துச்செல்லவேண்டிய பொறுப்பு பெரும்பான்மையாகவுள்ள முஸ்லிம்மக்களுக்குள்ளது.
இருப்பினும் இந்த மயானவீதி தொடர்பில் தமக்கு அநீதி பாரபட்சம் இழைக்கப்பட்டுவிடுமோ என அந்தமக்கள் எம்மிடம்விடுத்த அச்சத்தின்காரணமாக இங்குவரவேண்டிவந்தது.
இப்பிரச்சினையை ஒருசிலருக்காக விட்டுவைத்தால் இன்றைய கொரோனாகால கட்டத்தில் தேவையில்லாத இனமுறுகலுக்கு வித்திடும் அபாயம் நிலவுகிறது. அதற்கு இருசாராரும் இடமளிக்கலாகாது.
நான் தவிசாளர் நௌசாட் அவர்களுடன் பேசினேன். சட்டத்திற்குட்பட்டவகையில் அந்தவீதி கட்டாயம் போடப்படும் என்ற உறுதிமொழியை வழங்கியுள்ளார். அதனை நம்புவோம்.அதுவரை பொறுத்திருப்போம் என்றார்.

சம்மாந்துறை பொலிஸ்நிலையச்சந்தியிலிருந்து உதயபுரம் தமிழ்க்கிராம மயானத்திற்குச்செல்லும் வீதி நிருமாணம் ஒருகுழுவினரால் மறைமுகமாக தடுக்கப்பட்டுவந்தது.குறித்தவீதி செல்லும் பாதையில் அருகே மைதானம் உள்ளது. எனவே வீதிக்கான காணியை மைதானத்திற்கு தேவை என்றநோக்கில் ஒருசிலர் செயற்பட்டதனால் அங்கு பிரச்சினை எழுந்தது.
ஏலவே மைதானத்திற்கென உதயபுரம் மயானபூமியிலிருந்து 15அடிக்கு மேற்பட்ட நிலம் விட்டுக்கொடுக்கப்பட்டுமுள்ளது. இந்நிலையில் குறித்த வீதிக்கு ஒருசிலர் தடையாகவிருப்பது தமக்கு கவலையளிப்பதாக உதயபுர மக்கள் கூறினர்.

இது சம்பந்தமாக கோரக்கர் பிள்ளையார் ஆலய நிருவாகசபையினர் அரசாங்க அதிபர் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் தவிசாளர் பிரதேசசெயலாளர் பள்ளிவாசல்குழுவினர் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியப்படுத்தினர். அதற்கான நிலஅளவை வரைபடம் பிரதேசசபை அங்கீகாரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.

அதற்கமைய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் அம்பாறை மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் அங்கு நேரடியாக விஜயம்செய்து பிரச்சினையை தவிசாளருடன்பேசி இணக்கப்பாட்டிற்குகொண்டுவந்துள்ளனர்.
இப்பிரதேசத்திலுள்ள மைதானம் மயானம் வீதிகள் அருகிலுள்ள சனசமுகநிலையகாணி அனைத்தும் பிரதேசசபையின் நிருவாகத்தின்கீழிருப்து குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :