ஓட்டமாவடி பிரதேசத்தின் மூத்த எழுத்தாளரும் முன்னாள் வட கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எஸ்.எல்.எம்.ஹனீபாவின் நினைவுக் குறிப்புகள் அடங்கிய மக்கத்துச் சால்வை மண்ணும் மணமும் எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்றது.
மக்கத்துச் சால்வை வாசகர் வட்டம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு நாவலடி சஹ்வி கார்டனில் வாசகர் வட்டத்தின் தலைவரும் எழுத்தாளருமான எஸ்.எச்.அரபாத் சஹ்வி தலைமையில் இடம்பெற்றது.
220 பக்கங்களைக் கொண்ட குறித்த நூலில் எஸ்.எல்.எம்.ஹனீபாவின் இலக்கியம், வாழ்வியல் தொடர்பாக இலக்கியவாதிகள், கல்விமான்கள் அரசியல்வாதிகள், அதிகாரிகள் உட்பட பலரும் எழுதியுள்ளனர்.
இந் நூல் வெளியீட்டு நிகழ்வில் அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம்.றிஸ்வி மஜீதி, கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர் முகம்மத் காஸிமி, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ. றியாஸ், மெளலவி ஏ.ஹபீப் காஸிமி, ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி ஏ.எம்.ஏ.காதர், ஓட்டமாவடி வர்த்தக சங்கத் தலைவர் ஏ.சீ.எம்.நியாஸ் மற்றும் எழுத்தாளர்கள்,கவிஞர்கள், ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment