இது தொடர்பில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.,
தமிழ் நாட்டில் கெங்கு மண்டலத்தை தனி மாநிலமாக பிரகடனப் படுத்தும் நடவடிக்கையில் இந்திய மத்திய அரசாங்கம் தீவிரமாக இறங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக தமிழ்நாடு பாஐக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார் அத்துடன் கெங்குநாடு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் அமிச்சா ஐனாதிபதியை சந்தித்து கலந்துரையாடி உள்ளார். இவ்வாறு உள் விவகாரங்கள் தொடர்கின்றன.
தமிழ்நாட்டை நான்கு மாநிலங்களாக பிரிக்க உள்ளிருந்து குரல் எழுப்பப் பட்டு வருகின்றது அதாவது கெங்குநாடு,சேரநாடு,பாண்டியநாடு, சோழநாடு என்ற மாநிலங்களாக. அவ்வாறு பிரிப்பதற்கான காரணமாக மக்கள் முன்வைக்கும் கோரிக்கை சென்னைப் பகுதியை விட ஏனைய பகுதிகளில் அபிவிருத்திகள் போதியதாக இல்லை இதனால் தங்களுக்கு போதிய வேலை வாய்ப்புக்கள் வருமானங்கள் இல்லை என்பதே ஆகும்.
கெங்கு நாடு என்பது இன்று புதிதாக உருவாகிய பெயர் அல்ல சங்க கால இலக்கியங்களான பத்துப் பாட்டு போன்றவற்றிலும் பாடல்களுள் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஒரு பாடலில் கெங்கு நாட்டில் 24 நாடுகள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுதந்திரத்தின் பின்னர் 25 மாநிலங்கள் உருவாகின 1990 களின் பின்னர் ஆந்திரா, உத்தரப்பிரதேசம்,பிகார் போன்ற மாநிலங்களில் இருந்து முறையே தெலுங்கானா,உத்தரக்காண்,யார்க்கண்டு போன்ற மாநிலங்கள் உருவாகின இதனால் தற்போது 28 மாநிலங்கள் உள்ளன.
இந்திய மத்திய அரசாங்கம் கடந்த ஆண்டு காஸ்மீர் பிரதேசத்தில் இரண்டு யூனியன் பிரதேசங்களை உருவாக்கியது அதே போல் தமிழ்நாட்டிலும் மாநிலங்களோ அல்லது யூனியன் பிரதேசங்களோ உருவாகலாம்.
தமிழ்நாடு என்பது ஈழத் தமிழர்களுக்கு மிகவும் வலுவான ஒரு ஆதரவுக் குரலாக இருந்து வருகிறது அது மட்டுமல்ல தொப்புள் கொடி உறவுகள் திரட்சியாக வாழும் மாநிலமாக உள்ளது. இதனை பிரிப்பதன் மூலம் இந்திய மத்திய அரசு மாநிலங்களில் பலம் பொருந்திய தங்களுக்கு எதிரான மாநில அரசாங்கத்தை பலவீனப் படுத்துவதுடன் தங்களுக்கு சாதகமான தனி மாநிலம் ஒன்றை உருவாக்கவும் முயற்சிக்கின்றனர். தற்போது பேசு பொருளாக உள்ள கெங்கு மாநிலம் பாரதிய ஐனதாவின் செல்வாக்கு மிக்க பகுதியாக மாறி வருகின்றது.
ஈழத் தமிழர்கள் தொடர்பில் அவர்களுக்கு வலுவான ஒரு மாநிலமாக தமிழ்நாடு இருப்பது இலங்கை அரசாங்கத்திற்கு கூட நீண்டநாள் தலையிடியாக உள்ளது ஆனால் தற்போதைய மாநில உடைவு என்ற செய்தி இலங்கை அரசாங்கத்திற்கு இனிப்பான செய்தியாக அமையும் அத்துடன் இலங்கையின் சிங்கள கடும் போக்காளர்களின் எதிர்பார்ப்பும் நிறைவேறுவதாக அமையும். ஆனால் ஈழத் தமிழர்களுக்கான ஆதரவுக் குரல் பலவீனமடையும் அபாயம் எதிர்காலத்தில் உள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Attachments area
0 comments :
Post a Comment