இதற்கமைவாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேக குணவர்த்தன புதிய வழி வழிகாட்டல் கோவையை வெளியிட்டுள்ளார்.
தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் தற்போது நடைமுயிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளன.
கொவிட் 19 வைரசு தொற்று பரவலின் நிலைமையை பொறுத்து சுகாதார வழிகாட்டல்களில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ,அனைத்து அரச தனியார் நிறுவனங்களும் உரிய முறையில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.
மத வழிபாட்டுத் தலங்களை இதற்கமைவாக திறக்க முடியும். இதேபோன்று திருமண வைபவங்களுக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையில் 25 வீதம் அல்லது ஆகக்கூடிய வகையில் 150ற்கு மேற்படாத வகையில் வைபவங்களை நடத்த முடியும்.
தனியார் மற்றும் வாடகை வாகன இருக்கைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன.
பொருளாதார மத்திய நிலையங்கள். திறந்த வர்த்தக சந்தைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செயலமர்வுகள், மாநாடுகள் ஆகியவற்றுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகக்கூடிய வகையில் கலந்து கொள்ளக்கூடியவர்களின் எண்ணிக்கை 50 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்துச் சேவை அனைத்து மாகாணங்களிலும் ஆசன எண்ணிக்கை 50 வீதத்திற்கு உட்பட்டதாக வரையறுக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் மாத்திரம் இத்தொகை 30 வீதமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகள் புதிய நடைமுறைகளுக்கமைவாக முன்னெடுக்கப்படுவதை நிறுவனத் தலைவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். ஆகக்குறைந்த ஊழியர்களின் எண்ணிக்கையுடன் இவை செயற்படுத்தப்பட வேண்டும். தேவையின் அடிப்படையில் நிறுவனப் பிரதானியினால் ஊழியர்களை சேவைக்கு அழைக்க முடியும். இவ்வாறு செயற்படுவது நிறுவனப் பிரதானியின் பொறுப்பாகும்.
அனைத்து நிறுவனங்களின் ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான இடைவெளி உள்ளிட்டவை சுகாதார வழிகாட்டலுக்கு அமைய அவசியம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
0 comments :
Post a Comment