சம்மாந்துறை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு.


பைஷல் இஸ்மாயில் -

ம்மாந்துறை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்களுடன் கணினி உள்ளிட்ட வைத்தியசாலைக்கு தேவையான பல உபகரணங்களை கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் திருமதி எம்.எஸ்.றிஸ்க்காவிடம் கையளித்து வைத்தார்.

இதன்போது, வைத்தியசாலையில் நிலவிவரும் குறைபாடுகள் தொடர்பான விடயங்கள் பற்றிய தகவல்களை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் திருமதி எம்.எஸ்.றிஸ்க்காவிடம் கேட்டறிந்துகொண்டார். இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளர் டொக்டர் எம்.ஏ.நபீல், வைத்தியர்களான ஏ.எல்.நஸ்றின் ஜஹான், எம்.ரீ.சாக்கிரா பானு, சுதேச மருத்துவ திணைக்கள கணக்காளர் என்.பாலநந்தன், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் திருமதி சி.ரி.நிர்மலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :