ஹெறொயின் போதைப்பொருட் பொதிகளை முச்சக்கர வண்டியில் எடுத்துச்சென்ற போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் மட்டக்களப்பு - மிச்நகர் பிரதேசத்தில் இன்று 27.07.2021 கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை இராணுவ புலனாய்வுப்பிரிவு உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த இரகசியத்தகவலையடுத்து ஏறாவூர் பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது பொதிசெய்யப்பட்டிருந்த ஐந்து கிறாம் ஹொறொயின் போதைப்பொருள் முச்சக்கர வண்டியில் காணப்பட்டதாக ஊழல் ஒழிப்புபிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் எச்எம். ஷியாம் தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
0 comments :
Post a Comment