ஏக தலைமைக்கு இனியிறங்கு முகம்.!?



மூகத்தின் அல்லது பிரதேசத்தின் அவசர தேவை கருதி ஆரம்பமாகும் அல்லது ஆரம்பிக்கப்படும் அரசியல் கட்சியின் ஸ்தாபகத் தலைமை, ஒருகால எல்லைக்குள் காலாவதியாவதுண்டு. அல்லது கவர்ச்சியற்றுப் போவதுண்டு என்றும் இதனைச் சொல்லலாம்.

மூலகர்த்தா என்பதற்காக,தலைமைகளின் ஆளுமைக் காலங்கள், அழியாதிருந்ததும் இல்லை. அரசியலில் இவர்களின் உச்சக்கட்ட உயர்ச்சி இறங்காதிருந்ததும் இல்லை. அரசியல் வரலாற்றின் தோற்று வாய் தொடக்கம் இந்தக் காட்சிகளை எமக்குக் காணக்கிடைக்கிறது.

நேரு, அறிஞர் அண்ணா, தேசபிதா டிஎஸ், பண்டாரநாயக்கா ஏன், தந்தை செல்வா எல்லோரும் இந்த விதிக்கு உட்பட்டவர்கள் தான்.
எல்லோருக்கும் உட்பட்ட இந்த விதிக்குள், தேசிய காங்கிரஸ் தலைமையும் உள்வாங்கப்பட்டதுதான்.அக்கரைப் பற்றின் அண்மைக்காலச் சம்வங்கள் இந்தத் தலைமையும் உட்பட்டுவிட்டதாக த்தான் அர்த்தம் கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

அயல்கிராமங்களுக்கும் அதிகாரம் என்ற அகலமான மனசைக் காட்டும் கட்சிக்குள், இன்று ஏகப்பட்ட அக்கிரமங்கள். இந்தக் கட்சி காலூன்றுவதற்கு கால்கோலாக களப்பணிகளில் நின்ற முன்னணிப்போராளிகள்,இன்று தலைமையின் கடைக்கண் பார்வைக்கும் படாதிருக்கின்றனர்.

உள்ளூராட்சித் தேர் தலின்போது ஒவ்வொரு வேட்பாளருக்கும் பங்குண்டென ஊரைக் கூட்டி உத்தரவாதம் கொடுத்த தலைமை,இன்று தொண்டைக்குழி இறுகும் நிலைக்கு, நிலைமைகள் நெருக்கடியாகி வருகின்றன.

"ஊரான்பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானாக வளருமென்பார் கள்".ஆனால்,தேசிய காங்கிரஸின் செயற்பாடுகள்,தன்பிள்ளையைத் தவிர எந்த ப் பிள்ளையையும் ஊட்டி வளர்த்ததாகத் தென்படவுமில்லை.

இதனால்,இந்தக் கட்சியின் எதிர்கால விதி,தற்கால இளமை ஒன்றின் தலைமையில் சுமத்தப் படுவதற்கான சாத்தியங்களே,தென்படு கின்றன. இந்தச் சாத்தியங்களைத் தீர்த் துக்கட்டத் தீட்டப்படும் திட்டங்களும், இள மையால் தகர்க்கப்பட்டுத்தான் வருகிற து. ஒரு கல்லில்,ஒரு குலைமாங்காய்க ளைப் பறிப்பதற்காகத் தருணம்பார்த்த இந்தத் தலைமை,இப்போது தலைகவிழப் போவதுதான் உண்மை.

ஊருக்கே விருப்பமான ஒரு எம் எஸ்ஸின் இடமாற்ற விடயத்தில் பல வேடத்துடனும்,இரட்டை நாக்குகளுடனும் நடந்துகொள்ளும் இந்தத் தலைமை இனிக்காலாவதியாகி விடும். தூண்டப்படும் பிரதேசவாதத்தில் தனக்கு தோதானதைத் தூக்கித் திரியும் இந்தத் தலைமை,எந்த வாதங்களையும் தாண்டி, குடும்பவாதம் தவிர,சிந்திப்பதாகத் தெரியவில்லை. இதுதான் இன்றுள்ள கவலை.

நவாஸ் சாஜித்
அட்டாளைச்சேனை








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :