பழுத்த அரசியல் அனுபவமுள்ள பஷில்ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகையை, பெருமனதுடன் வரவேற்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் அஹமட் எம்.பி தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷக்களின் குடும்பத்துக்கு பஷிலின் வருகை புதிய உற்சாகத்தையூட்டும். இழந்துபோகும் நம்பிக்கைகளை மீண்டும் தூக்கி, இனசமரசத்தை நிறுத்த இவரது புதிய வருகை உதவுமென எதிர்பார்க்கிறேன். துல்லியமான பார்வையில், இவர் அரசுக்கு வழங்கிய ஆலோசனைகள் நாட்டின் பொருளாதாரத்தை, அன்று செழித்தோங்கச் செய்திருக்கிறது. வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் போன்ற திட்டங்களால்,அரசியல் பொதுவெளியில் பஷிலின் ஆளுமை அடையாளம் காணப்பட்டது. இந்த ஆளுமையின் தேவையை நாட்டு மக்கள் உணர்ந்து நிற்பதாகவே நான் கருதுகிறேன்.
இவ்வாறான ஒரு ஆளுமை, பாராளுமன்றத்துக்கு வந்துள்ளமையையும் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளமையையும் எவரும் விரும்பாதிருக்க முடியாது. அரசியலில்,பன்முக போட்டிகளிருக்கலாம்,அதற்காகப் பஷிலின் வருகையை எவரும் எதிர்க்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment