திங்கள் முதல் கல்முனைப்பிராந்தியத்திற்கு தடுப்பூசிகள்! கிழக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் தௌபீக்.



வி.ரி.சகாதேவராஜா-
கிழக்கு மாகாணத்தில் இதுவரை தடுப்பூசி வழங்கப்படாமலிருந்துவந்த கல்முனைப்பிராந்தியத்திற்கான முதலாவதுதொகுதி கொரோனாத் தடுப்பூசிகள் நாளை வந்துசேரவிருக்கின்றன. பெரும்பாலும் திங்கட்கிழமை(12) முதல் அவை செலுத்தப்படவிருக்கின்றன.

இவ்வாறு கிழக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் எ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
கிழக்கில் கல்முனைப்பிராந்தியத்திற்க இன்னும் தடுப்பூசி வழங்கப்படவில்லையே எப்போது வழங்கப்படும் என்று கேட்டதற்கு அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் கூறுகையில்:
அங்கு 60வயதுக்கு மேற்பட்டோர் கர்ப்பிணித்தாய்மார்கள் தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலை மற்றும் சுகாதாரஅலுவலகங்களில் பணியாற்றுவோர் வீட்டிலிருக்கும் நெருங்கிய உறவுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படவிருக்கின்றன.

அதேவேளை பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு கிழக்குமாகாணமெங்கும் நடைமுறைப்படுத்தப்படவிருக்கின்றன.

வைத்தியசாலைகள் சுகாதாரஅலுவலகங்கள் குறித்த நிலைய ங்கள் போன்றவற்றில் அவை வழங்கப்படவிருக்கின்றன. அந்தந்த சுகாதாரவைத்தியஅதிகாரிகள பொதுசுகாதாரபரிசோதகர்கள் கிராமசேவையாளருடுன் தொடர்புகொண்டு அவற்றை உறுதிபப்டுத்திக்கொள்ளலாம்.

இதேவேளை கிழக்கில் ஏலவே திருகோணமலை மட்டக்களப்பு மற்றும் அம்பாறைப்பிராந்தயிக்ளுக்கு தலா 25ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருந்தன. அங்கு 2வது டோஸ் வழங்கப்படவுள்ளன.மேலும் மட்டு.மாவட்டத்திற்கு நேற்றுமுன்தினம் 50ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு கடந்த 3தினங்களாக அவை செலுத்தப்பட்டுவருகின்றன.

கடந்த 24மணிநேரத்தில் மட்டு.மாவட்டத்தில் 50பேர் தொற்றுக்குள்ளானதுடன் ஒருவர் மரணித்திருந்தார் அதேபோல் கல்முனைப்பிராந்தியத்தில் 26பேருக்கு தொற்று ஏற்பட்டு ஒருவர் மரணித்திருந்தார். அதேவேளை அம்பாறையிலர் 17பேரும் திருமலையில் 10பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :